ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களின் உடல் எடை மிகக் குறைவாக இருக்கும். இவை பல்வேறு நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். புரதம், கால்சியம் போன்ற சத்துகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் ஹீமோகுளோபினுக்கு பலமுறை கொடுப்பதில்லை. எனவே, ஹீமோகுளோபின் அளவை சரியாக பராமரிக்க சில உணவுகளை நாம் அவசியம் சாப்பிட வேண்டும்.
இதில், பிரதானமாக இருப்பது முருங்கைக் கீரை தான். இதில் பி12 சத்துகளும் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் முருங்கைக் கீரையின் மகத்துவம் அறியாமல் அதனை நாம் தவிர்த்து விடுகிறோம். நம் உணவில் முருங்கைக் கீரை எடுத்து கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
இதேபோல், பேரீச்சம்பழம் தாராளமாக சாப்பிடலாம். இவை சாப்பிடுவதன் மூலமாகவும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். அதனடிப்படையில் தேவையான அளவு பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்.
மேலும், மாதுளம் பழமும் நாம் அவசியம் சாப்பிட வேண்டும். இவை புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை சாறு எடுத்து குடிப்பதை விட, பழமாக சாப்பிடுவதில் தான் அதிக சத்து இருப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“