/tamil-ie/media/media_files/uploads/2022/11/toilet.jpg)
Spend more time in the toilet causes many heath issues
இந்த நாட்களில் நம்மில் பலர் கழிப்பறையில் அமர்ந்திருப்பதில் கணிசமான நேரத்தை செலவிடுகிறோம், மலம் கழிப்பதற்கு மட்டும் அல்ல.. செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது அல்லது புத்தகங்களைப் படிப்பது என பல வேலைகளை கழிப்பறையில் செய்கிறோம். வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபடுவதற்கும், டாய்லெட் சீட்டில் அமர்ந்து உங்களுக்குத் தோன்றுவதைத் தடையின்றிச் செய்வதற்குமான ஒரே இடமாக இப்போது கழிவறைகள் மாறிவிட்டன.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, யாரும் 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடக்கூடாது. உண்மையில், குறைவான நேரம் தான் சிறந்தது.
கிருமிகள்
/tamil-ie/media/media_files/uploads/2022/11/bacteria.jpg)
முதலில், உங்கள் தொலைபேசியுடன் கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் ஃபோனை 18 மடங்கு அதிக கிருமிகளுக்கு ஆளாக்குகிறது. உண்மையில், 6 ல் 1 ஃபோனில், அவற்றின் மேற்பரப்பில் மலப் பொருளின் தடயங்களைக் கொண்டிருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
மூல நோய்க்கு வழிவகுக்கும்
நீங்கள் கழிப்பறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதற்கு மற்றொரு காரணம், கழிப்பறையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் நீள வழிவகுக்கும்.
குடல் இயக்கத்தில் பிரச்சனை
மேலும், குடல் இயக்கம் சரியில்லாமல் இருப்பது கழிப்பறையில் அதிக நேரம் செலவழிப்பதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம். இருப்பினும், மலக்குடலில் உள்ள நரம்புகளை அழுத்தும் நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.