உலகத்தில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், பலரும் தங்களுக்கு தலைக்கு மேல் பிரச்னை இருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி என்ன தலைக்குமேல் பிரச்னை என்றால் தலைமுடி சரியாக வரவில்லை என்பதுதான் அந்த தலைக்கு மேல் பிரச்னை. சரி உங்களுக்கு தலைமுடி சீராக வளரவில்லை என்ற கவலை உள்ளதா, கவலைப்பட வேண்டாம். மருதாணி இலை உடன் வெங்காயடத தோல் போட்டு காய்ச்சிய தண்ணீரை தலைக்கு தடவி வாருங்கள், உங்கள் தலைமுடி காடு போல வளர்வதைப் பார்ப்பீர்கள். இது பாட்டி சொன்ன ரகசியம். ஒரே மாதத்துல மாற்றம் தெரியும்.
முதலில் அடுப்பை பற்றவைத்து விட்டு, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 கிளாஸ் ட்டதண்ணீர் ஊற்றுங்கள். அதில் 1 டீஸ்பூன் தேயிலைத்தூள் போடுங்கள். அடுத்து ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை சேருங்கள். அதில் 2 வெங்காயத்தின் தோல்களை மட்டும் சேருங்கள். நன்றாக கொதிக்கவிடுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றியிருக்கிறீர்கள் என்றால், அது அரை கிளாஸ் அல்லது முக்க்கால் கிளாஸ் தண்ணீராக வரும் வரை கொதிக்க வையுங்கள்.
இதையடுத்து, இந்த தண்ணீரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி, ஆறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, இந்த மருதாணி மற்றும் வெங்காயத் தோல் தண்ணீரை உங்கள் தலைமுடிக்கு தலைமுடியின் வேரில் படும்படியாக தலைமுழுவதும் தடவுங்கள், இந்த தண்ணீரைத் தடவிய பிறகு, லேசாக மசாஜ் செய்யுங்கள். அரை மணிநேரம் ஊறிய பிறகு, தலை குளித்துவிடுங்கள். இப்படி இந்த தண்ணீரை வாரத்துக்கு 2 முறை உங்கள் தலைக்கு தடவி வாருங்கள், நிச்சயமாக உங்கள் தலைமுடி வளர்வதில் ஒரு பெரிய மாற்றம் தெரியும்.
இந்த மருதாணி மற்றும் வெங்காயத் தோல் தண்ணீரை ஒரு மாதம் தடவி வந்தால், உங்கள் தலைமுடி வளர்வதில் ஒரு பெரிய மாற்றம் தெரியும், தலைமுடி காடுபோல அடர்த்தியாக வளர்வதைப் பார்க்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“