தேநீர் குடிக்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு தேநீர் அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனடிப்படையில் தேநீர் வாயிலாகவே சர்க்கரை நோய்க்கு மருந்தை எடுத்துக் கொள்ள முடியும்.
இதில் முதன்மையாக இருப்பது சீந்தில் எனப்படும் மூலிகை. இது நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. இதற்காக 100 கிராம் அளவிற்கு சீந்தில் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், வேப்பம் பிசினை 20 கிராம் எடுத்துக் கொள்ளலாம். மேலும், துளசி விதை, சுக்கு, ஏலக்காய் மற்றும் ஆவாரம் பூ ஆகியவற்றையும் 20 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து, 2 கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் சுமார் 100 மி.லி வரும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர், சிறிது அளவில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். மேலும், இந்த தேநீர் குடித்த பின்னர் 45 நிமிடங்களுக்கு வேறு எந்த பொருள்களும் சாப்பிடக் கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“