ஆறாத சர்க்கரை நோய் புண்ணையும் ஆற்றக்கூடிய ஒரு அரிய மூலிகை மருந்து பற்றி டாக்டர் சாலை மருதமலை முருகன் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் டாக்டர் சாலை ஜெயா கல்பனா ஹெல்த்தி வேர்ல்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
சர்க்கரை நோயால் ஏற்படும் புன்னை குணப்படுத்தக்கூடிய தன்மை வெள்ளை ஊமத்த பூவிற்கு உண்டு என்று அவர் கூறுகிறார். இந்த வெள்ளை ஊமத்தம் பூவின் பூ, தண்டு, இல்லை என அனைத்து பகுதிகளும் பல ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலில் வலி, வீக்கம் இருக்கக்கூடிய இடங்களை குணப்படுத்தும்.
டிப்ஸ் 1: ஊமத்தம் பூ இலை, நல்லெண்ணை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்தோ, வதக்கியோ வீக்கம் மற்றும் புண் இருக்கும் இடத்தில் பத்து போட்டு வர விரைவில் குணமாகும் .
டிப்ஸ் 2: ஊமத்தம் இலை எடுத்து அரைத்து சம அளவு தேங்காய் எண்ணெய் விட்டு தைலம் மாதிரி காய்ச்சி எடுக்கும் போது இது சர்க்கரை நோயினால் உண்டான ஆறாத புண்களையும் ஆற்றும் என்கிறார். மத்தன் தைலம் என்ற பெயரில் நாட்டு மருந்து கடைகளிலும் இவை கிடைக்கும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.