உங்கள் காய்கறிகளை நீண்ட காலத்திற்கு புதிதாக வைத்திருக்கும் 6 ஜீனியஸ் ஹேக்ஸ் இதோ!

உங்கள் பொருட்களை ஃபிரிட்ஜில் நீண்ட காலம் நீடிக்கச் செய்யும் சில எளிய சேமிப்பு ஹேக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இனி புத்தம் புதிய காய்கறிகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக சமைக்கலாம்.

kitchen hacks
Here are 6 genius hacks that will keep your vegetables fresh for a long time

அழுகிய காய்கறிகளை குப்பையில் வீசும் போது கவலையாக இருக்கிறதா? இந்த ஜீனியஸ் சேமிப்பு ஹேக்குகள் மூலம், உங்கள் காய்கறிகள் நீண்ட காலத்திற்கு புதியதாக இருக்கும்!

புதன் கிழமைக்கு பாலக் பனீர் சமைக்கலாம் என்று நினைத்து, திங்கட்கிழமை கீரை வாங்குவோம்; கீரையை சமைப்பதற்காக ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கும்போது, ​​அது வாடிப்போவதைக் காணலாம். என்ன உங்களுடன் தொடர்புபடுத்த முடிகிறதா? புதிதாக வாங்கிய காய்கறிகள், சில நாட்களில் அழுக ஆரம்பிக்கும் போது அது வெறுப்பாகிறது. கிட்டத்தட்ட நாம் அனைவரும் சமையலறையில் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சனை இது.

அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அந்த காய்கறிகளை நாம் எப்படி சேமித்து வைக்கிறோம் என்பதுதான். உங்கள் பொருட்களை ஃபிரிட்ஜில் நீண்ட காலம் நீடிக்கச் செய்யும் சில எளிய சேமிப்பு ஹேக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இனி புத்தம் புதிய காய்கறிகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக சமைக்கலாம்.

உங்கள் சமையலறைக்கான 6 எளிதான சேமிப்பு ஹேக்குகள் இங்கே:

பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் சாப்பிடும் போது கழுவவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமிப்பதற்கு முன் கழுவினால், விளைபொருளின் ஈரப்பதம் குறையும். இது அழுகும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே பொருட்களை வாங்கும் போதே சேமித்து வைக்கவும். நீங்கள் சமைக்கத் திட்டமிடும்போது மட்டும் காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவும்.

இலை கீரைகளை காகித பேப்பரில் சேமிக்கவும்

பலாக், வெந்தயம் போன்ற கீரைகளை சேமிப்பது சற்று தந்திரமானதாக இருக்கலாம், ஏனெனில் அவை சில நாட்களில் புத்துணர்ச்சியை எளிதில் இழக்கின்றன. எனவே கீரைகளை ஒரு பேப்பர் டவலில் வைப்பதன் மூலம், பேப்பர் டவல் அனைத்து அதிகப்படியான ஈரப்பதத்தையும் உறிஞ்சி, காய்கறிகள் எளிதில் ஈரமாவதைத் தடுக்கும்.

இறைச்சியை உறைய வைக்கவும்

உங்கள் இறைச்சியை எப்போதும் ஃப்ரீசரில் சேமித்து வைக்கவும், இது அதன் ஆயுளை நீட்டிக்கும். எனவே இறைச்சி அழுகுவதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் எளிதாக மொத்தமாக இறைச்சியை வாங்கலாம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

மூலிகைகளை புதிய நீரில் சேமிக்கவும்

கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்ற புதிய மூலிகைகளை ஃபிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் எளிதில் நனைந்து அழுகிவிடும். அவற்றை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க எளிதான வழி, ஒரு ஜாடி தண்ணீரில் அவற்றை ஒரு செடியைப் போல நிமிர்த்து வைத்து சேமிக்கலாம்.

இலை காய்கறிகளை ப்யூரி (Puree) செய்யவும்

இலைக் கீரைகள், ஈரமாகத் தொடங்கினால், அவற்றைத் தூக்கி எறிய வேண்டாம், அவற்றின் ஆயுளை நீட்டிக்க விரைவான வழி, அவற்றை ப்யூரி செய்து சேமித்து வைப்பதாகும். ப்யூரிட் (Pureed) காய்கறிகள் நீண்ட காலம் நீடிக்கும்.

எலுமிச்சையை ஃபிரிட்ஜில் சேமிக்கவும்

நீங்கள் எலுமிச்சையை வெளியே வைத்திருந்தால், அது தவறு. எலுமிச்சை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் போது, ​​குறிப்பாக காற்று புகாத டப்பாவில் வைக்கப்படும் போது நீண்ட காலம் நீடிக்கும்.

இந்த ஸ்டோரேஜ் ஹேக்குகளை முயற்சி செய்து, உங்கள் அன்றாட வாழ்க்கையை தொந்தரவு இல்லாததாக ஆக்குங்கள். உங்களிடம் இதுபோன்ற எளிதான ஹேக் அல்லது சமையலறை உதவிக்குறிப்பு இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Here are 6 genius hacks that will keep your vegetables fresh for a long time

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com