குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறதா? ஆரோக்கியமான இதயத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

மருத்துவரின் கூற்றுப்படி, முதன்மையான காரணங்களில் ஒன்று நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கிறது.

heart-attack-winters-
Keep your body warm by wearing sweaters, jackets, and warmers to help the body regulate body temperature more effectively. (Photo: Getty/Thinkstock)

மாரடைப்பு எப்போதும், எவருக்கும் வேண்டுமானாலும் வரலாம். எனவே உயிரிழப்பைத் தடுக்க எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

மாரடைப்பு’ வானிலையால் கட்டுப்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதுதான் மக்கள் தெரிந்துகொள்ள விரும்பிய ஒன்று. பதில் ஆம் எனில், ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அவை மிகவும் பொதுவானதா?

புது தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் கார்டியாக் சயின்சஸ் சேர்மேன் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், குளிர்காலம் பெரும்பாலும் பலரால் விரும்பப்படும் பருவமாகக் கருதப்படுகிறது ஆனாலும், இந்த சமயத்தில் தான், பெரும்பாலான மாரடைப்பு ஏற்படுகிறது.

“சுவாச நோய்கள் மற்றும் வைரஸ்களின் ஊடுருவல் மட்டுமல்ல, இதய நோய்களும் குளிர்காலத்தில் கவலையை ஏற்படுத்தும். திடீர் மாரடைப்பு மற்றும் நோய்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் வேளையில், குளிர்காலம் முன்னெப்போதையும் விட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

குளிர்காலத்தில் மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் அரித்மியா போன்ற இருதய நிகழ்வுகள் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுவதால், இந்த பருவம் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும், ”என்று அவர் கூறுகிறார்.

குளிர்காலம் உங்கள் இதயத்தை ஏன் பாதிப்படையச் செய்கிறது?

மருத்துவரின் கூற்றுப்படி, முதன்மையான காரணங்களில் ஒன்று நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கிறது.

“உடலின் உயிரியல் நிலை’ சிம்பத்தெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் தடைபடுகிறது, இது நம் உடலில் இருக்கும் இரத்த நாளங்களை சுருக்குகிறது. இது ‘வாசோகன்ஸ்டிரிக்ஷன் (vasoconstriction) எனப்படும். இந்த செயல்பாட்டின் போது, ​​உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தை அழுத்துவதால், இரத்த அழுத்த அளவு அதிகரிக்கிறது.

“குளிர்ந்த மாதங்களில், வெப்பநிலையில் பரந்த வேறுபாடுகள் இருக்கலாம், மற்றும் உங்கள் உயிரியல் அமைப்புகளை வெப்பமாக வைத்திருக்க உற்பத்தி செய்யப்படும் வெப்பம்’ தீவிர நிலைகளில் ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் இதயத்தின் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் ‘ஹைப்போதெர்மியா’வை (hypothermia) ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்குகிறார்.

இதய நோயாளிகள் எதை மனதில் கொள்ள வேண்டும்?

ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது.

வெப்பநிலையில்’ சமநிலையை பராமரிக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும் ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரிப்பதால், இது கடுமையான நிகழ்வுகளில் மாரடைப்பைத் தூண்டும்.

“மோசமான இதய செயல்பாடு கண்டறியப்பட்ட நோயாளிகள், நுரையீரலில் திரவம் திரட்சியின் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இது ஒரு நபர் சாதாரணமாக சுவாசிக்க கடினமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

மேலும், இந்த காலகட்டத்தில் சுவாச நோய்கள் மிகவும் பொதுவானவை என்பதால், அதிக ஆக்ஸிஜனுக்கான ஒட்டுமொத்த இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் அவை அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்று டாக்டர் சிங் விளக்குகிறார்.

குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை:

ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் வார்மர்களை அணிவதன் மூலம் உங்கள் உடலை சூடாக வைத்திருங்கள், இது உடல் வெப்பநிலையை மிகவும் திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது.

அதிகப்படியான மது அருந்துதல் அல்லது புகைபிடிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

குளிர்காலத்தில், இதய ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளுக்கு மக்கள் ஏங்குகிறார்கள்; சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதய செயல்பாட்டை மேம்படுத்த தினசரி ஓட்டபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். உங்கள் மன அழுத்தத்தை ஆரோக்கியமாக நிர்வகித்தல், பணிச்சுமையை குறைத்தல் மற்றும் உங்கள் தினசரி சீரான தூக்கம் ஆகியவற்றை உறுதி செய்யவும்.

நீங்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உடலின் செயல்பாடுகளைத் தடுக்கும் மற்றும் இதய பிரச்சினைகளை மோசமாக்கும் அனைத்து காரணிகளையும் கண்காணிப்பது அவசியம்.

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக உங்கள் இருதய மருத்துவரைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆரம்பகால நோயறிதல் எந்தவொரு அடிப்படை சிக்கல்களிலும் தொடர்ந்து இருக்க உதவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Here are doctor shares tips to maintain for a healthy heart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com