scorecardresearch

ஆல்யா, மைனா, மணிமேகலை, நிஷா.. லைஃப்ல ஜெயிக்க இவங்கள மாதிரி ஹஸ்பண்ட் கிடைச்சா போதும்!

தங்கள் கணவன்மார்களின் தொடர் ஆதரவால், மீண்டும் சீரியலில் கலக்கும் நடிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆல்யா, மைனா, மணிமேகலை, நிஷா.. லைஃப்ல ஜெயிக்க இவங்கள மாதிரி ஹஸ்பண்ட் கிடைச்சா போதும்!
Husbands behind the success of actresses in Tamil Television

திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா தான் மினி டுட்டோரியலாக உள்ளது. அதேபோல, ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருப்பான்; அதுவும் ஒரு கல்யாணமான பெண்ணின் வெற்றிக்கு பின்னால், கண்டிப்பாக கணவன் இருப்பான் என்று பிகில் படத்தில் விஜய் பேசும் வசனம் உண்டு.

அப்படி தங்கள் கணவன்மார்களின் தொடர் ஆதரவால், மீண்டும் சீரியலில் கலக்கும் நடிகைகளை  இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கதாபத்திரத்தில் நடித்தார். அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக வந்தனர். இவர்கள் ஜோடி ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். இப்போது பர்சனல் லைஃப், பிரொஃபஷனல் லைஃப் இரண்டிலும் ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருக்கின்றனர்.

பார்வதி ஷபானா- ஆர்யன்!

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் பரவியது. இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து காதலை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் கடந்த நவம்பரில் நடந்தது. இப்போது செழியன் பாக்கியலெட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார், ஆனால், பார்வதி, செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா- சஞ்சீவ்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா- ராணி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆல்யா. அதில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்தார். இவர்களின் திருமணத்துக்கு ஆல்யாவின் பெற்றோர் சம்மதிக்காததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அழகான ஆண்குழந்தையும் பிறந்தது. சஞ்சீவ் இப்போது கயல் சீரியலில் நடிக்கிறார். ஆல்யா, ராஜா ராணி சீசன் 2-வில் நடிக்கிறார். ஆனால், இப்போது குழந்தை பிறந்ததால் சீரியலுக்கு சிறிது பிரேக் விட்டிருக்கிறார்.

அபிநவ்யா- தீபக்</strong>

தீபக்’ கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். இப்போது ஈரமான ரோஜாவே சீசன் 2, சிப்பிக்குள் முத்து சீரியல்களில் நடிக்கிறார். செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா, பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில், ஆனந்தி என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் காதலர் மலர்ந்து,  கடந்த ஜனவரி மாதம், திருமணம் நடந்தது. இப்போது இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

சித்து –ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது. சீரியலில் நடிக்கும் போது இருவருக்கும் காதலர் மலர்ந்தது. தொடர்ந்து கடந்த 2021 நவம்பரில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார்.

மைனா நந்தினி- யோகேஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். ஏற்கெனவே, தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த மைனாவுக்கு, யோகியின் வருகைக்கு பிறகு, அவரது வாழ்க்கை இப்போது அழகாக சென்று கொண்டிருக்கிறது.

மணிமேகலை- ஹூசைன்

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார். பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆனார்.  மணிமேகலை’ இப்போது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொண்டுள்ளார். மணிமேகலையின் ஷூட்டிங் முதல் யூடியூப் வரை, ஹூசைன் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.

அறந்தாங்கி நிஷா- ரியாஸ்

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். இப்போது சீரியல், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷாவுக்கு, அவரது கணவர் ரியாஸ் எப்போதும் பக்கபலமாக இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Here is the list of husbands behind the success of actresses in tamil television