உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும், துள்ளலாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான அழகு சாதன தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் தலைமுடி துயரங்களுக்கான பதில் மிகவும் பொதுவான சமையலறை பொருட்களில் ஒன்றாகும் என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா?
நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்று யோசிக்கிறீர்களா? அது சிவப்பு வெங்காயம் தான், இது உங்களுக்கு ஊட்டமளிக்கும். பொடுகு இல்லாத, நீண்ட மற்றும் கவர்ச்சிகரமான முடியை தரக்கூடிய எளிய மூலப்பொருள் சிவப்பு வெங்காயமே.
"சிவப்பு வெங்காயம் கந்தகத்தின் களஞ்சியமாகும், மேலும் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. எனவே, முடியை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கவும் சிவப்பு வெங்காயம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் நம்பிக்கைக்குரிய முடிவுகளின் காரணமாக, இது இப்போது அழகுத் துறையின் ஒரு பகுதியாகவும் உள்ளது, ”என்று லோட்டஸ் ஹெர்பல்ஸ் நிர்வாக இயக்குனர் நிதின் பாஸி கூறியுள்ளார்.
முடி வளர்ச்சிக்கு உதவுதல்
சிவப்பு வெங்காயம் உச்சந்தலையின் pH மதிப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
முடி உதிர்தலை தடுத்தல்
மாசுபாடு மற்றும் பிற வெளிப்புற அழுத்தங்கள் முடி பலவீனமடைய காரணமாகின்றன, இதனால் முடி உதிர்கிறது. இதற்கு, சிவப்பு வெங்காய எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, மேலும், இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் என்சைம்களை உருவாக்குகிறது.
உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கான தீர்வு
சிவப்பு வெங்காயம் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்தம் ஒரு மாய மூலப்பொருள், ஏனெனில் அதில் அமினோ அமிலங்கள் உள்ளன. வெங்காய சாற்றின் நன்மை என்னவெனில் முடியின் துளைகளில் உள்ள அசுத்தங்களை அகற்றுவதில் அற்புதமாக செயல்படுகிறது, அதே நேரத்தில் சேதமடைந்த முடியை சரிசெய்து அதன் பிரகாசத்தை மீண்டும் கொண்டுவருகிறது.
பொடுகு மற்றும் நமைச்சல் தொல்லை
சிவப்பு வெங்காய சாறு பொடுகு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலை போக்குவதற்கான சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகும். இது பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதை கடினமாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால் பொடுகை போக்குகிறது.
முடி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரகாசமான கூந்தல்
சிவப்பு வெங்காயத்தின் பண்புகள், முடிகளின் வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் அதன் அமைப்பை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்பட்டதன் விளைவாக முன்பைப் போல முடி பிரகாசிக்க இது உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.