வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்!

வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும், மேற்கொண்டு கொழுப்பு சேராமல் இருக்கவும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்ப்போம்

நம்மைச் சுற்றி பத்து பேர் இருந்தால், அதில் 7 பேருக்கு நிச்சயம் தொப்பை இருக்கும். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொப்பை இருந்தே தீரும். மேற்கத்திய உணவுப் பழக்கம், முறையற்ற உணவு உட்கொள்ளும் முறை, மனக்கட்டுப்பாடு இல்லாமை, மரபு வழி என எப்படியாவது தொப்பை உருவாகி விடுகிறது. மிகச் சிலர், மருத்துவரிடம் சென்று, ஆலோசனைகள் கேட்டு, உடற்பயிற்சி, யோகா, அளவான உணவு என தொப்பையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், பலர் அதைப் பற்றி நினைத்தாலும், செய்ய முற்படுவதில்லை. இதனால், இளவயதில் அனைத்தையும் தாங்கும் உடல், 30 வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக மந்தமாக தொடங்குகிறது. முடிவில், சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என அனைத்தும் வந்து ஒட்டிக் கொள்கின்றன.

இந்த நிலையில், வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும், மேற்கொண்டு கொழுப்பு சேராமல் இருக்கவும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்ப்போம்.

சக்கரவள்ளிக்கிழங்கு : இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும். காலை உணவாக இதனைச் சாப்பிடலாம். இதிலிருக்கும் கேரோடினாய்ட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் போன்றவை நம் உடலின் ரத்தச் சர்க்கரையளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இவை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் கலோரிகள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இதிலிருக்கும் அதிகப்படியான விட்டமின் ஏ,சி,பி6 போன்றவையும் நமக்கு அதீதமான பயன் தருகிறது.

கொண்டக்கடலை : கொண்டக்கடலையில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற கொண்டக்கடலை தான். இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.

பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பட்டாணி : பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்காத அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதய நோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது. பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசியைத் தவிர்த்து, பிரவுன் அரிசியைச் சாப்பிடலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Here some foods to reduce fat in hip

Next Story
நரைமுடிக்கு காரணமாகும் உணவுகள்! தவிர்க்க என்ன வழி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com