scorecardresearch

தலைவலியை விரைவில் குணப்படுத்த சில பயனுள்ள டிப்ஸ்!

இன்றைய நவநாகரீக உலகில் தலையே இல்லாதவர்கள் தான் தலைவலி இல்லாமல் வாழ முடியும்

தலைவலியை விரைவில் குணப்படுத்த சில பயனுள்ள டிப்ஸ்!

கிராம்பு : கிராம்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீஸ்ப்பூன் பால் சேர்த்து அப்படியே அதனை விழுங்கி விடுங்கள். உப்பிற்கு தண்ணீரை உறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இதனை உட்கொள்வதால் தலையிலுள்ள அதிகப்படியான தண்ணீரை உறிந்து கொள்ளும். இதனால் அதீத தலைவலி குறைந்திடும்.

எலுமிச்சை : பெரும்பாலும் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் தான் தலைவலி ஏற்படுகின்றன. ஒரு டம்ளர் சூடான நீரில், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சட்டென தலைவலி குறைந்திடும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதை தடுப்பதால் தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திடும்.

யூக்கலிப்டஸ் தைலம் : இதை அப்படியே நேரடியாகப் பயன்படுத்துவது சரியல்ல. அதனுடன் தண்ணீர், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நீர்த்துப்போகச் செய்த பின்னரே பயன்படுத்தவேண்டும். இந்த எண்ணெயை மருத்துவர் பரிந்துரையில்லாமல் குடிக்கக் கூடாது. கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பட்டை : மசாலா பொருட்களில் ஒன்றான பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பட்டையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை தலைக்கு பற்றுப் போல போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். தலைவலியை நிவர்த்தி செய்யும் ஆற்றம் இதற்கு உண்டு.

உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது என்றால் சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள். இதற்கு பதிலாக விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் பி 12,புரதம், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபாஸ்ட் புட் மற்றும் அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Here the tips to recover immediately from headache

Best of Express