பிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி!

நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர்

பிரியங்கா சோப்ரா திருமணம்
பிரியங்கா சோப்ரா திருமணம்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது திருமணத்தை ஜோத்பூர் அரண்மனையில் தான் நடத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம். இதற்காக ஜோத்பூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ளனர் அவரின் பெற்றோர்கள்.

பிரியங்கா சோப்ரா திருமணம்:

பாலிவுட்டில் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் நடிகைகள் யார் என்றால்? கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் அவர்கள் பிரியங்கா சோப்ரா- திபீகா படுகோனே என்று. இவர்கள் இருவருக்குள் இருக்கும் பனிப்போரை பல மேடைகள், பல பேட்டிகள் பார்த்துள்ளன.

இந்த பனிப்போருக்கு  காரணம் என்ன? என்று ஒரு லிஸ்ட் எடுத்து பார்த்தால் அவை நீண்டுக் கொண்டே போகும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட விமர்சனங்களை ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ளனர். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் நடிகர்  – ரன்வீர் சிங்கை நேற்று முன் தினம் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் இத்தாலியில் மிகப்பிரம்மாண்டமாக அரங்கேறியது.

இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் குறித்த பேச்சு இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி அனைவரின் கண்ணும் தீபிவீர் பக்கம் இருக்கம் ,   பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு மருமகளாக செல்லும் பிரியங்கா சோப்ரா தனது திருமணம் தேதியை அறிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா–நிக் ஜோனாஸ் திருமணம் அடுத்த மாதம் டிசம்பர் 1–ந் தேதி ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது.நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம்  கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இருந்த போது இவர்கள்து காதல் தற்போது திருமணத்த்கில் முடியவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற  இவர்களின் நிச்சயதார்த்த பார்ட்டில் நிக் ஜோனாஸ், பிரியங்காவுக்கு 2 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார்.  அதனைத்தொடர்ந்து பிரியங்கா திருமணத்திற்கு மட்டும் 10 கோடிக்கு ஷாப்பிங் செய்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா திருமணம்

 

4 நாட்கள் இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரியங்கா சோப்ராவிற்கு  அரசு குடும்பத்து திருமணம்போல் தனக்கு நடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில்,  அவர்களின் குடும்பத்தார் ஜோத்பூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை தேர்வு செய்துள்ளனர். இந்த அரண்மனையின் ஒரு நாள் வாடகை 2 கோடி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து நிக் ஜோனாசின் உறவினர்களும், நண்பர்களும் தனி விமானம் மூலம் இந்தியா வருகிறார்கள். அவர்களை வரவேற்கவும், சிறப்பு விருந்துகள் அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். 7 நட்சத்திர விடுதியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரியங்கா சோப்ரா திருமணம்

மேலும், திருமண புகைப்படங்களை வெளியிடும் உரிமையை இருவரும் ரூ.18 கோடிக்கு விற்று இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நிக் மற்றும் பிரியன்கா குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.   பிரியங்கா தனது நண்பர்களிடம்  தீபிகாவின் கல்யாணத்தை விட பலமடங்கு தனது திருமணம் குறித்த பேச்சு வைரலாகும் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Heres how expensive priyanka chopra nick jonas wedding venue umaid bhawan palace is

Next Story
4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா?சிம்பு கார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express