நீங்கள் 20 வயது இருக்கும்போதே, இந்த மாற்றங்களை உணவில் செய்தால், நாம் அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்நிலையில் நாம் சில சத்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.
புரத சத்து: நமது சதைகளின் வளர்ச்சிக்கு, அதை சரிப்படுத்தி, வலுவாக்க உதவுகிறது. லீன் புரத சத்துகள் உள்ள கோழி இறைச்சி, மீன், பீன்ஸ், டோஃபூ, ஆகியவை எடுத்துகொள்ளலாம்.
கால்சியம் – வலுவான எலும்புகளை பெற கால்சியம் உதவுகிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பச்சை காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
இரும்பு சத்து: நாம் சக்தியுடன் செயல்பட, மூளை நன்றாக யோசிக்க உதவும். லீன் மாமிசம், பீன்ஸ், தானியங்கள், மசூர் பருப்பு எடுத்துகொள்ள வேண்டும்.
ஓமேக 3 பேட்டி ஆசிட்: இந்த கொழுப்பு சத்து மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். மூளை யோசித்து செயல்படும் திறனை அதிகரிக்கும். கொழுப்பு சத்து உள்ள மீன்கள், பிளக்ஸ் விதைகள், வால்நட்.
இந்நிலையில் உங்கள் உணவுத் தேர்வுகள்தான் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சர்க்கரை நோய், இதய நோய், அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதின் சாத்தியங்கள் குறையும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“