ஒரு கிளாஸ் சூடான தண்ணீர் மற்றும் ஓமம் சேர்த்து சாப்பிட்டால், நமது வயற்று பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இந்நிலையில் 100 கிராம் ஓமத்தில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்வோம்.
புரத சத்து: 17.2 கிராம்
கொழுப்பு சத்து: 21.8 கிராம்
மினரல்ஸ் : 7.9 கிராம்
நார்சத்து: 21.2 கிராம்
கார்போஹைட்ரேட்- 24.6 கிராம்
கலோரிகள்: 263
கால்சியம் – 1525 மில்லி கிராம்
பாஸ்பரஸ்- 443 மில்லி கிராம்
இரும்பு சத்து – 12.5 மில்லி கிராம்
ஓமம் இதில், பேக்ட்ரீயாவை எதிர்க்க உதவும். பூஞ்சை தொற்றுகளுக்கு எதிர்பாக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
வாயுத்தொல்லை தொடர்பான சிக்கலை போக்கும். மோசமான அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும். இருமலை குணமாக்கும் தன்மை கொண்டது. இதனால் நுரையீரலுக்கு அதிக காற்று செல்ல உதவும். இதில் உள்ள கார்மினேட்டிவ் தன்மை அஜீரணம், வயிறு உப்புதல், வாயுத் தொல்லை ஏற்படாமல் பார்த்துகொள்ளும். சர்க்கரை நோயாளிகளும் இதை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த குளுக்கோஸ் அளவு சீராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“