நெல்லிக்காயில் பல்வேறு பயன்கள் இருக்கிறது. இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளலாம்.
கலோரிகள்: 44
கார்போஹைட்ரேட்: 10.18
நார்சத்து: 4.3 கிராம்
சர்க்கரை : 4.4 கிராம்
புரத சத்து:0.88 கிராம்
கொழுப்பு சத்து: 0.58 கிராம்
வைட்டமின் சி: 600 – 700 மில்லிகிராம்
வைட்டமின் எ, வைட்டமின் கே, வைட்டமின் பி- காம்பிளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது .
இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, தொற்றுகள், சளி, காய்ச்சலில் இருந்து நம்மை காப்பாற்றும். இதில் பாக்டீரியாவிற்கு எதிராகவும், வீக்கத்திற்கு எதிராகவும் பண்புகள் உள்ளது.
இதில் உள்ள நார்சத்து, ரத்ததில் உள்ள சர்க்கரையை உடல் மெதுவாக உள்வாங்கிக்கொள்ள செய்வதால், ரத்த சர்க்கரை அளவு குறையும். குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை கண்டிப்பா சாப்பிடலாம்.
இது வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கி ஜீரணத்திற்கு உதவும். இதில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள சத்துகளை உடல் எடுத்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக சத்து மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ நமது பார்வை மேம்பட உதவுகிறது. வைட்டமின் ஏ பார்வை குறைபாட்டை தடுப்பதோடு, வயதாவதால் ஏற்படும் விஷயங்களை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கண்களை பாதிக்கும் பாக்ட்டீயா தொற்றில் இருந்து காப்பாற்றுகிறது, மேலும் கண் வீக்கம், சிவப்பாக மாறும் தன்மையை குறைக்கிறது.
இதில் பைட்டோநியூட்ரியன்ஸ் , ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இவை சிந்தித்து செயல்படும் ஆற்றலுக்கு உதவுகிறது. முளையின் செல்கள் சேதமாகாமல் பார்த்துகொள்கிறது. இதில் உள்ள அதிகபடியான வைட்டமின் சி நோர்பைன்ப்ரைன் என்பதை சுரக்க உதவுகிறது. இது மறதிநோய் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் பேட்டி லிவர் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“