Advertisment

இதய நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருப்பு கிரேப்ஸ்: இன்னும் நிறைய நன்மைகள் இருக்கு

கருப்பு கிரேப்சில், இனிப்பு மற்றும் வெளிப்படையான சுவை இருக்கும். இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது.

author-image
WebDesk
New Update
sada

கருப்பு கிரேப்சில், இனிப்பு மற்றும் வெளிப்படையான சுவை இருக்கும். இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. 100 கிராம் கருப்பு கிரேப்சில் இருக்கும் சத்துகளை தெரிந்துகொள்வோம்.

Advertisment

கலோரிகள் : 69, கார்போஹைட்ரேட்ஸ்: 18.1 கிராம், நார்சத்து: 0.9 கிராம், சர்க்கரை : 15.5 கிராம், புரத சத்து: 0.6 கிராம், கொழுப்பு சத்து, 0.2 கிராம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பிளக்ஸ் , கால்சியம் , பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது.

இதில் ஆன்டி ஆக்ஸிடண்டான பாலிபினால்ஸ் , பிளபாய்ட்ஸ் , ரஸ்வரட்டால் உள்ளது. இதில் உள்ள ரஸ்வரட்டால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இதனால் இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்களை தடுக்கும்.

இதில் உள்ள நார்சத்து, ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். மேலும் மலச்சிக்கலை குணமாக்கும். இதில் இருக்கும் சில பண்புகள் வீக்கத்திற்கு எதிராக செயல்படும். இதில் உள்ள பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவரக்ள், நிச்சயமாக இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஒட்டுமொத்த கலோரிகளின் அளவை பொருத்து சிறிய அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment