நம்மில் பலருக்கு ப்ளூபெரி பழத்தின் நன்மைகள் பற்றி சரியாக தெரிவதில்லை. இது சர்க்கரை நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இந்நிலையில் 100 கிராம் ப்ளூபெரி பழத்தில் உள்ள சத்துகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 57
கொழுப்பு சத்து: 0.3கிராம்
நார்சத்து: 2.4 கிராம்
சர்க்கரை – 10 கிராம்
வைட்டமின் சி- 9.7 மில்லி கிராம்
வைட்டமின் கே- 19.3 மில்லி கிராம்
கால்சியம் – 6 மில்லி கிராம்
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை மற்றும் செல்களை சேதத்திலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும். சிந்தித்து செயல்படும் திறனை அதிகரிக்கும். மேலும் இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் தீவிர நோய்கள் ஏற்படாது.
சர்க்கரை நோயாளிகள் இதை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இயற்கையான இனிப்பு மட்டுமே இருப்பதால், இது ரத்த சர்க்கரையை அதிகரிக்காது.
கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துகொள்வதால், வைட்டமின் சி, பொட்டாஷியம், போலிக் ஆசிட் அவர்களுக்கு கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“