காலிபிளவரில் அதிக நன்மைகள் இருப்பதில்லை என்று நாம் நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல இதில் ஆரோக்கியமான பயன்கள் அதிகம்.
இதை நாம் உப்பு சேர்ந்த சூடான நீரில் கழுவுவது மிகவும் முக்கியம். இந்நிலையில் 100 கிராம் காலிபிளவரில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 25
கார்போஹைட்ரேட் : 5 கிராம்
நார்சத்து: 2 கிராம்
புரத சத்து: 1.9 கிராம்
கொழுப்பு சத்து: 0.3 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாஷியம், மேன்கனீஸ், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பாட்டோதனிக் ஆசிட், ரிபோபிளாவின், தைமைன், இரும்பு சத்து உள்ளது.
காளிபிளவரில், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் மான்கனீஸ். ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமாக குடலை பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கலை குறைக்கிறது.
இந்நிலையில் இதில் உள்ள பண்புகள் கல்லீரலை சுத்திகரிக்கும். இதில் வைட்டமின் கே உள்ளதால், காளிபிளவர் எலும்புகளை பாதுகாக்கிறது.
இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. மேலும் அதிக நார்சத்து உள்ளதால் சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“