பாலாப் பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக 100 கிராம் பலா பழத்தில் என்ன சத்து உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்- 95, நார்சத்து – 1.5 கிராம், சர்க்கரை- 19.08 கிராம், புரத சத்து – 1.72 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாஷியம், கால்சியம் உள்ளது.
இதில் உள்ள அதிக நார்சத்து ஜிரணத்தை தூண்டும், குடலின் ஆரோக்கியத்தை பார்த்துகொள்ளும். இதில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும். இதுபோல இதய நோய் ஏற்படமால் பார்த்துகொள்ளும்.
இதில் உள்ள பொட்டாஷியம், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைந்த அளவில் எடுத்துகொள்ள வேண்டும். இதை கர்ப்பிணி பெண்களும் எடுத்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“