எலுமிச்சையை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள நன்மைகளை பற்றி நமக்கு முழுவதுமாக தெரியாது. எலுமிச்சையில் நமது ஜீரணத்தை சரிப்படுத்துவது முதல் சருமம் பொலிவாக மாறும் வரை உதவுகிறது.
100 கிராம் எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்
கலோரிகள் : 29
புரத சத்து: 1.1 கிராம்
கார்போஹைட்ரேட்: 9.3 கிராம்
நார்சத்து: 2.8 கிராம்
வைட்டமின் சி: 53 மில்லி கிராம்
பொட்டாஷியம்: 138 மில்லி கிராம்
கால்சியம்: 26 மில்லி கிராம்
இதில் வைட்டமின் சி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தை பொலிவாக மாற்ற உதவும். உடலில் உள்ள பி.எச் அளவுகளை சீர்படுத்தும். இதில் உள்ள பெக்டின் நார்சத்து ஜீரணிக்க உதவுகிறது. இவை உடல் எடை குறையவும் உதவுகிறது.
இதில் உள்ள குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ், சுகர் நோயாளிகள் இதை பயன்படுத்த உதவியாக இருக்கும். மேலும் சர்க்கரையை மெதுவாக ரத்ததில் கலக்க வைக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி இரும்பு சத்தை உடல் எடுத்துகொள்ள உதவும். இதனால் கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துகொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“