மக்கனா மிகவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். இந்நிலையில் இது மிகவும் எளிமையாக ஜீரணமாகும் ஒன்று. வயிறு உப்புதலை தடுக்கும். இந்நிலையில் 100 கிராம் மக்கனாவில் இருக்கும் சத்துகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கலோரிகள்: 347
சோடியம் : 1 மில்லிகிராம்
கார்போஹைட்ரேட்: 76 கிராம்
கொழுப்பு சத்து: 0.9 கிராம்
சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 0.2 கிராம்
மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 0.3 கிராம்
புரத சத்து: 9 கிராம்
மெக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 உள்ளது.
மக்கனாவில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்பு சத்து உள்ளதால் உடல் எடை விரைவில் குறையும். மேலும் இது அதிகம் சாப்பிட்டதுபோல எண்ணம் கொடுக்கும்.
இதில் அதிக அளவில் புரத சத்து உள்ளது. இது நமது தசைகளை சரி செய்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினமும் நமது உடலுக்கு தேவையான புரத சத்து இதில் உள்ளது.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், உடலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். இந்நிலையில் இது புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை இது குறைக்க உதவுகிறது. மேலும் இது ரத்த சர்க்கரை அளவை சீராக்கும். அதனால் சுகர் நோயாளிகளுக்கு நல்லது.
இதில் குறைந்த அளவில் சோடியம் உள்ளதால், இதய நோயாளிகளுக்கு இது சிறந்த ஸ்நாக்ஸாக விளங்குகிறது. ரத்த அழுத்ததையும் குறைத்து, மாரடைப்பு வருவதை தடுக்கும்.
பாஸ்பரஸ் மற்றும் மெக்னிஷியம்: இவை இரண்டும் சேர்ந்து நல்ல ஆரோக்கியமான எலும்பை கொடுக்க முயற்சிக்கிறது. நமது பல் மற்றும் எலும்புகளுக்கு பாஸ்பரஸ் சத்து முக்கியம். அதுபோல மெக்னீஷியம் சீரான ரத்த அழுத்த அளவை பாதுகாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“