மல்பெரி பழங்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்ஸ், நார்சத்து உள்ளது. இந்நிலையில் 100 கிராம் மல்பெரி பழத்தில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 43
கார்போஹைட்ரேட் : 9.8 கிராம்
புரத சத்து: 1.4 கிராம்
கொழுப்பு சத்து: 0.4 கிராம்
நார்சத்து: 1.7 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, போலேட், இரும்பு சத்து, பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் உள்ளது.
இதில் ஆந்தொசையனின், ரஸ்வரட்ரோல் உள்ளது. இவை உடலை பாதிப்பிலிருந்து காப்பாற்றும். தீவிர இதய நோய், புற்று நோய், மறதி நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இது கொலஸ்டரால் அளவை குறைத்து, இதய ரத்த குழாய்களை பாதுகாக்கும் இதனால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், சர்க்கரையை ரத்ததில் மெதுவாக கலக்க உதவும். இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் இதனால் ரத்த சர்க்கரை உடனடியாக அதிகமாகாது.
நார்சத்து உள்ளதால், ஜீரணக்கும் வேகத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை தடுக்கும். குடலில் உள்ள நுண்ணுயிர்களை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ரஸ்வரட்டோல் உள்ளதால் நமது சருமம் ஆரோக்கியமாக மாறும். வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படும் அறிகுறிகளை சருமத்தில் குறைக்கும். இது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் இது உடல் எடை குறைய உதவும்.
இதில் உள்ள வைட்டமின் கே, கால்சியம் ஆரோக்கியமான எலும்புகளை கொடுக்கிறது. இந்த இரண்டு சத்தும் எலும்பிற்கு முக்கிய தேவையாக அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“