கடுகை நாம் தினமும் சாப்பாட்டில் சேர்த்துகொள்கிறோம். இந்நிலையில் கடுகில் அதிக சத்துகள் இருக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். நமது ஜீரணத்தை ஊக்குவிக்கும்.
இந்நிலையில் 100 கிராம் கடுகில் என்ன சத்துகள் இருப்பது என்பதை தெரிந்துகொள்வோம். கலோரிகள் : 508 , கார்போஹைட்ரெட் :28.09 கிராம், நார்சத்து: 12.2 கிராம், சர்க்கரை : 6.75 கிராம், புரத சத்து: 26.08 கிராம், கொழுப்பு சத்து: 36.4 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பிளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்டான செலினியம், ஒமேகா – 3 பேட்டி ஆசிட் உள்ளது.
இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் ஆர்திரைடிஸ் போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் , செலினியம் இந்த பண்புகளை வழங்குகிறது.
நமது ஜீரண மண்டலத்தில் உள்ள சுரப்பிகளை இது தூண்டும், இதனால் ஆரோக்கியமான ஜீரணிக்கும் முறை அதிகமாகும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும்.
இதில் உள்ள கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் நமது எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். இதில் குறைந்த கிளை சிமிக் இண்டக்ஸ் உள்ளது. மேலும் சுகர் நோய்யை கட்டுக்குள் வைத்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“