குயினோவா நமது சிறுதானியங்களைப் போன்ற ஒன்று. இந்நிலையில் இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் உள்ள அதிக நார்சத்து ஜீரண பிரச்சனைகளை சீராக்கும். இந்நிலையில் 100 கிராம் குயினோவாவில் உள்ள சத்துகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கலோரிகள்: 120
புரத சத்து: 4.1 கிராம்
கொழுப்பு சத்து: 1.9 கிராம்
கார்போஹைட்ரேட்: 21.3 கிராம்
நார்சத்து: 2.8 கிராம்
இரும்பு சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ், சிங் உள்ளது.
உடல் எடை குறைய உதவுகிறது. ஆரோக்கியமான ஜீரணம் நடைபெற உதவுகிறது. இதில் உள்ள நார்சத்தால் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இது உதவியாக இருக்கிறது. இதில் சிறிய அளவில் வைட்டமின் இ, பி வைட்டமின்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதன் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், சர்க்கரையை நமது ரத்தத்தில் மெதுவாக சேர்க்கும். இதில் உள்ள அதிக நார்சத்து சுகரை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள அமினோ ஆசிட் கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ள குழந்தை வளர்சிக்கும் உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குணமாக்கும். இதில் உள்ள பி வைட்டமின்ஸ் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“