இனி ஸ்வீட் கார்னுக்கு நோ சொல்லாதீங்க: 5 முக்கிய பயன்கள் இருக்கு

மக்காச்சோளத்தை நாம் எப்போதாவது சாப்பிடுவோம். இதில் நார்சத்து உள்ளது. சரியான அளவில் நாம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

மக்காச்சோளத்தை நாம் எப்போதாவது சாப்பிடுவோம். இதில் நார்சத்து உள்ளது. சரியான அளவில் நாம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
sweet

ஸ்வீட் கார்ன்

மக்காச்சோளத்தை நாம் எப்போதாவது சாப்பிடுவோம். இதில் நார்சத்து உள்ளது. சரியான அளவில் நாம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாது என்று கூறப்படுகிறது.  100 கிராம் மக்காச்சோளத்தில் இருக்கும் சத்துகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

கலோரிகள்: 86

கார்போஹைட்ரேட்- 19 கிராம்

புரத சத்து: 3.2 கிராம்

Advertisment
Advertisements

கொழுப்பு சத்து: 1.2 கிராம்

நார்சத்து: 2.7 கிராம்

வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி3, போலேட், பொட்டாஷியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் உள்ளது.

இதில் உள்ள நார்சத்து ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்டான லிடியின், சியாக்யன்தின் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி, தைமைன், நியசின், பொட்டாஷியம் ஆகிய சத்துகள் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடலாம். இதில் உள்ள  போலிக் ஆசிட்  கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதால், கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துகொள்ளலாம். சுகர் பேஷண்ட்ஸ் அவர்களின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் குறைந்த அளவில் இதை சாப்பிடலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: