நம் எல்லா குழம்பு மற்றும் சில கூட்டு வகைகளில் கூட புளியை பயன்படுத்துவோம். இந்நிலையில் 100 கிராம் புளியில் என்ன சத்துகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் : 239
கார்போஹைட்ரேட் : 62.5 கிராம்
புரத சத்து: 2.8 கிராம்
கொழுப்பு சத்து: 0.6 கிராம்
நார்சத்து: 5.1 கிராம்
வைட்டமின் சி: 3.5 மில்லி கிராம்
வைட்டமின் பி1 : 0.428 மில்லி கிராம், வைட்டமின் பி2, வைட்டமின் பி3, கால்சியம், இரும்பு சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் உள்ளது.
இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் வீக்கத்தை குறைக்கும். மேலும் இது வீக்கத்தை, வலியை குறைக்கும். இதில் பொட்டாஷியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதில் உள்ள நார்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இதனால் இதய ரத்த குழாய்களை பாதிக்காது. இதில் வைட்டமின் சி மற்றும் மற்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். இதனால் இளம் வயதிலேயே வயதாகும் தன்மையை குறைக்கும்.
கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இதனால் இதை சுகர் நோயாளிகள் எடுத்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“