கோதுமையில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். கோதுமை என்பது நாம் தினமும் சாப்பிடும் ஒரு உணவாக மாறிவிட்டது. 100 கிராம் கோதுமையில் உள்ள சத்துகளை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
இதில் 339 கலோரிகள் உள்ளது. 72.26 கிராம் கார்போஹைட்ரேட், நார்த்து 12.2 கிராம். சர்க்கரை 0.41 கிராம், கொழுப்பு சத்து : 1.9 கிராம்
முழு கோதுமையில் உள்ள நார்த்து, கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய்யை குறைக்கிறது. மேலும் அதிக நார்சத்து தன்மை ஆரோக்கியமான ஜீரணத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.
இதில் உள்ள நார்சத்து அதிகம் சாப்பிட்டது போல , நிறைவுத்தன்மையை தரும். இதனால் உடல் எடை சீராக இருக்கும். இது குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது என்பதால், ரத்த சர்க்கரையை சீராக்கும்.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மோசமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் கோதுமையை சாப்பிடலாம். ஆனால் இதில் அளவு மிகவும் முக்கியம். இதில் உள்ள பாலிக் ஆசிட், இரும்பு சத்து, பி- வைட்டமின்ஸ் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தை கொடுப்பதால், கர்ப்பமான பெண்கள் கோதுமையை சாப்பிடலாம்.
Read In English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“