Advertisment

எள்ளு சாப்பிட்டா அவ்ளோ சத்து உடலுக்கு கிடைக்கும்: இனி இதை ஒதுக்காதீங்க

எள்ளு சமையலின் முக்கிய ஒன்றாக அமைகிறது. இந்நிலையில் இதில் புரத சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளது.

author-image
WebDesk
New Update
எள்ளு

எள்ளு

எள்ளு சமையலின் முக்கிய ஒன்றாக அமைகிறது. இந்நிலையில் இதில் புரத சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளது.

Advertisment

இந்நிலையில் 100 கிராம் எள்ளில் என்ன சத்துகள் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்: 573

புரத சத்து: 18 கிராம்

கொழுப்பு சத்து: 50 கிராம்

கார்போஹைட்ரேட்: 23 கிராம்

நார்சத்து: 12 கிராம்

கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் உள்ளது.

இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், குறிப்பாக சிசமோல், சிசமின் இருப்பதால், உடலை சேதத்திலிருந்து பாதுகாக்கும். இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். இதில் அன்சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது. இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் அதிகமாகும்.

இதில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தால் எலும்புகள் வலுவாகும். இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால், ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளதால், சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்த உதவும்.

இதில் கால்சியம் மற்றும் மெக்னீஷியம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துகொள்ளலாம். இந்நிலையில் இதை அதிகமாக எடுத்துகொண்டால், ஜீரண பிரச்சனையை அதிகப்படுத்தும். இதனால் சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment