சியா விதைகளில் எண்ணற்ற சத்துகள் இருக்கிறது. இந்நிலையில் 100 கிராம் சீயா விதைகளில் என்ன சத்து இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் : 138
புரத சத்து: 4.7 கிராம்
நார்சத்து: 9.8 கிராம்
கொழுப்பு சத்து: 8.6 கிராம், ஒமேகா 3 பேட்டி ஆசிட்
கார்போஹைட்ரேட்ஸ்: 12 கிராம்
வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், மான்கனீஸ், ஜிங்க், காப்பர், பொட்டாஷியம் உள்ளது.
சியா விதைகளில் நார்சத்து உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், ஜீரணத்திற்கு உதவுகிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்புவது போல் உள்ளதால், உடல் எடை குறைக்க உதவும். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது இதய நோய் ஏற்படும் சாத்தியங்களை குறைக்கும். கொலஸ்டராலை குறைக்கும்.
அதில் உள்ள மெக்னீஷியம், பாஸ்பரஸ், கால்சியம் , பொட்டாஷியம் சத்துகள் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிட்டான க்யூயர்சிட்டின் வீக்கத்தை குறைக்கும். நமது ரத்ததில் கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரையாக மாறும் வேகத்தை மெதுவாக்குவதால், ரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
இதில் உள்ள நார்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் நார்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, புரத சத்து உள்ளதால், கார்போஹைட்ரேட் உடல் எடுத்துகொள்வதை மெதுவாக்குகிறது. இதனால் சாப்பிட உடனே ரத்த குளுக்கோஸ் அதிகரிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“