டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது குழந்தைக்கு ’இஜான்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயருக்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இஜான் பெயரின் விளக்கம்:
இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துக் கொண்டதை சம்பவம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடம் என பல சாதனைகளை செய்திருந்த சானியா, திருமணத்திற்கு பிறகும் இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று கம்பீரமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சானியா மிர்சா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று (30.10.18) அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து மாலிக், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மாலிக் தனது ட்விட்டரில், ‘சானியா மிர்சாவுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி எப்போதும் போல் தைரியமாகவும் அரோக்கியத்துடனும் இருக்கிறார். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. மிகவும் பெருமையாக உணர்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்திருந்தார்.
அவரது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், குழந்தைக்கு என்ன பெயர்? வருங்காலத்தில் குழந்தை டென்னிஸ் பிளேயரா? அல்லது கிரிக்கெட் பிளேயரா? என்று பல விவாதங்களை இணையத்தில் ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களின் முதல் கேள்விக்கு சானியா மிர்சா பதில் அளித்துள்ளார். சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
Thank you from the bottom of our heart to everyone for the wishes from Sania and I, and our families.
Our son’s name is Izhaan ❤ #BabyMirzaMalik ???????? https://t.co/F7bPCnGnL6
— Shoaib Malik ???????? (@realshoaibmalik) 30 October 2018
இஜான் என்றால் அரபு மொழியில் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம். இந்த பெயரை வைக்க வேண்டும் என்று தனது குடும்பத்துடன் கலந்து யோசித்த பின்னர், சானியா மிர்சா இஜான் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
குழந்தையின் பெயருடன் குடும்ப பெயராக ‘மிர்சாமாலிக்’ என்று இணைத்து அழைப்போம் என்றும் சானியா தெரிவித்துள்ளார்.