இனிமே செம்பருத்தி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க; உங்கள் தலை முடியை உறுதியாக்கும் ஹேர்மாஸ்க்
தலை முடியை உறுதியாக மாற்றும் ஹோம்மேட் ஹேர்மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதை செய்வதற்கு செம்பருத்தி இலைகள் மற்றும் கற்றாழை இருந்தால் போதுமானதாக இருக்கும்.
தலை முடியை உறுதியாக மாற்றும் ஹோம்மேட் ஹேர்மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதை செய்வதற்கு செம்பருத்தி இலைகள் மற்றும் கற்றாழை இருந்தால் போதுமானதாக இருக்கும்.
தற்போதைய சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருவதால் பொதுமக்களின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலை முடி மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் இது இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Advertisment
நம்முடைய உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் வாயிலாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஆனால், இவை இரண்டையும் சரி செய்தாலும் மற்ற வெளிப்புற காரணங்களால் உருவாகும் முடி உதிர்வை போக்குவதற்கு சில பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தலை முடி பராமரிப்பு என்றால் விலை உயர்ந்த ஷாம்பூ, சீரம் போன்ற பொருட்கள் தான் நம்முடைய நினைவுக்கு முதலில் வரும். எனினும், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால், இதை பயன்படுத்தும் போது ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்காக வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர்மாஸ்கை உபயோகப்படுத்தலாம். பொதுவாக, செம்பருத்தி இலைகள் முடி வளர்ச்சியை அதிகரித்து, அவற்றை உறுதியாக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இத்துடன் மற்றொரு பொருளை சேர்த்து பயன்படுத்தும் போது அது கூடுதல் பலன் அளிக்கும்.
Advertisment
Advertisements
இதற்காக சுமார் 20 செம்பருத்தி இலைகளை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் தேவையான அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி செய்தால் நம் தலை முடிக்கு தேவையான ஹேர்மாஸ்க் ரெடியாகி விடும்.
இதை நம் முடியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி செய்யும் போது நம் தலை முடி உறுதியாக வளரும். மேலும், முடியும் ஸ்மூத்தாக இருக்கும். இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேர்மாஸ்கை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
நன்றி - Pavi’s Homie Delights Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.