மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்ட வழக்கு; பொய் வழக்கு என ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு...!

மயில் மார்க் சம்பா ரவை மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
மயில் மார்க் ரவை

மயில் மார்க் ரவை வழக்கு தள்ளுபடி

மயில் மார்க் சம்பா ரவையின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் உரிமையாளர்கள் கோவையில் வலியுறுத்தினர்.

Advertisment

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது,

கோவை ரங்கே கவுடர் வீதியில் 60 வருட பாரம்பரியமிக்க ஒரு நிறுவனமாக எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் மயில் மார்க் சம்பா ரவையின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.

Advertisment
Advertisements

மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என ஒரு பொய்யான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தார்.

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயில் மார்க் சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவை தயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதில் மயில் மார்க் சம்பா ரவையில் எந்தவிதமான வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் .

மேலும் வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்த் என்பவரின் முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை.

கடந்த மாதம் 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவில் மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது  ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு என்றும்  உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு தாக்கல் செய்த ரவி காந்த் ஒரு தனியார் ஆய்வக அதிகாரியிடம் மிரட்டி பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளாதாகவும் இதற்கு பின்புலமாக கோவையில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளதாக மயில் மார்க் சம்பா ராவியின் பங்குதாரர்கள் தெரிவித்தனர். 

மேலும் மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் சிலர் பரப்பினர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். 

இந்த வீடியோவை ஏற்கனவே வழக்கு தொடர்ந்த  ரவிகாந்த் தான் பரப்பி வருவதாகவும், இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் கடந்த 22 ஆம் தேதி ஆஜராகுமாறு ரவி காந்த்திற்கு கோவை  கடை வீதி போலீசாரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் அன்றைய தேதியில் ரவி காந்த் நேரில் வந்துவிட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்ப சென்றுவிட்டதாக தெரிவித்த பங்குதாரர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவருக்கு பின்புலமாக செயல்பட்டவர் யார் என்பது விரைவில் வெளி உலகிற்கு வந்துவிடும் எனவும் அதனால் தான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், ரவிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் பொதுமக்களுக்கு தாங்கள் தரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் எங்கள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே ,அனைத்து வயதினரும் சாப்பிடும் விதத்தில் மிகவும் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை மீண்டும் அழுத்தமாக கூறுவதாகவும்,

சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் பிராண்ட் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடம் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை  நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது ,உடன் தமிழக வியாபாரிகள் சம்மேளன கடைவீதி செயலாளர் தியாகராஜன், மாயா சன்ஸ் உரிமையாளர் நரேஷ், பரமானந்தம் பிரதர்ஸ் நிறுவன உரிமையாளர் அருள் ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: