சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இலக்கியா சீரியலில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து. ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது அழகு பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
காலை, நைட்னு ஷூட்டிங் போறதால டார்கிள் சர்கிள்ஸ் வந்தது. அப்போ டீ பேக்ஸ், வெள்ளரி, கீரிம் எல்லாம் டிரை பண்ணேன். ஆனா எதுவும் வேலை செய்யல. டார்கிள் சர்கிள்ஸ் போகணுனா நல்ல தூங்கணும். ஆனா, சீரியல்ல இருக்கிறவங்களுக்கு அது ரொம்ப கஷ்டம். ஷூட் முடிஞ்சு நைட் வீட்டுக்கு போகவே ரொம்ப லேட் ஆகும். அப்புறம் மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு, குளிச்சுட்டு தூங்குறதுக்குள்ள விடிஞ்சுடும்.
அதேமாதிரி மேக்கப் நிறைய யூஸ் பண்றதலா முகப்பரு வரும். அப்போ சந்தனம், பெட்நோவேட் கிரீம் வைக்கலாம். ஐஸ் கியூப்ஸ் பெஸ்ட். ஆனா, நீங்க என்ன பண்ணாலும் பரு உடனே போகாது. ஒரு 2-3 நாள் ஆகும்.
Advertisment
Advertisement
எனக்கு காம்பினேஷன் ஸ்கின். பொதுவா என்னோட ஸ்கின் கேர்க்கு மாய்ஸ்சரைசர், ஷியா பட்டர், கற்றாழை ஜெல், ஐஸ் கியூப்ஸ் யூஸ் பண்ணுவேன். ஷூட் இல்லாத நேரங்கள்ல முல்தானி மட்டி, அரிசி மாவுல தயிர் இல்லன்னா ரோஸ் வாட்டர்ல கலந்து ஃபேஸ் பேக் போட்டுப்பேன்.
நிறைய பேரு அழகா இருக்கனும்னு பார்லர் போவாங்க. அதுதான் பெரிய பிரச்சனை. பார்லர் போனா, இன்ஸ்டண்ட் லுக் உடனே கிடைக்கும். ஆனா அது ஹெல்தி இல்ல. எல்லாமே கெமிக்கல்ஸ் தான். முக்கியமா முடிக்கு தான் சொல்லனும். நான் கலரிங் பண்ணிட்டு, ஹேர் ஸ்ட்ரைட், ப்ளோ டிரை அது, இதுன்னு பண்ணி நல்லா இருந்த முடிய ஃபுல்லா டேமேஜ் பண்ணிட்டேன்.
பொண்ணுங்களுக்கு முடிதான் அழகு. அதை பத்திரமா பாத்துகணும், ஹேர் கலரிங் மட்டும் பண்ணவே பண்ணாதீங்க.
எனக்கு விக்டோரியா சீக்ரெட் பர்ஃப்யூம் ரொம்ப பிடிக்கும். கலோசல் காஜல் தான் யூஸ் பண்றேன். ஹிமாலாயா நீம் ஃபேஸ் வாஷ், ஷீ பட்டர் பாடி லோஷன், கலர்பார், பிஏசி லிப்ஸ்டிக், பிஏசி மாய்ஸ்சரைசர் என்னோட ஃபேவரைட். முடிக்கு, நார்மல் பாராசூட் ஆயில், மொரோக்கன் ஷாம்பூ எனக்கு பிடிக்கும்,” என ஹிமா பிந்து தனது அழகு பராமரிப்பு குறித்து பேசினார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“