கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து. இப்போது சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.
ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது என்பதால் ஆர்வம் வந்துவிட்டது.
சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டிரெஸ் என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.

அப்படி முன்னதாக ஹிமா பிந்து பகிர்ந்த ஒரு போட்டோ, இப்போது பலரையும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம், அந்த போட்டோவில் நடிகர் விஜய், ஹிமா பிந்துவை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இவரது வீட்டின் பக்கத்தில் தான் நடந்துள்ளது. அப்போது தான் விஜய் அங்கிளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ஹிமா பிந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதோ அந்த போட்டோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”