Hindu-Muslim marriages : இவர்கள் தான் காதலர் தினத்தை மேலும் அழகாக்குபவர்கள். ஆம். அப்படி தான் கூற வேண்டும். சாதரணமாக வேறொரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து மணம் செய்து கொள்வதே மிகப்பெரிய சவலாக இருக்கின்ற நிலையில் இவர்களோ தன்னுடைய துணைவர்களாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்து கரம் பிடித்துள்ளனர். இதோ இது இவர்களின் கதை. நூற்றாண்டு வன்மங்கள், வெறுப்புகளை துச்சமென நினைத்து காதலை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களின் கதை இதோ.
அகங்க்ஷா சர்மா மற்றும் முகமது அப்துல் சுயேப்
நாங்கள் இருவருமே உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பிராமண வகுப்பில் இருந்து வெளியேறி ஒரு இந்துவை துணையாக ஏற்றுக் கொண்டாலே எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை சமாளிப்பது மிகவும் கடினம். ஆனால் நான் விரும்பியதோ ஒரு இஸ்லாமியரை. எங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என்பது எங்களுக்கு மிகவும் சவாலான காரியமாக இருந்தது. முகமது அப்துல் வீட்டிலோ, அவருக்கு நேர் மூத்ததாக திருமணம் ஆகாத அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அந்த நேரத்தில் முகமதின் திருமணம் அவர்களின் பெற்றோர்களுக்கு முக்கியமானதாக படவில்லை. நான் யாரையாவது திருமணம் செய்துவிட்டு சென்றுவிட்டால் முகமதுக்கு வேறொருவரை மணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினார்கள். இது அவருக்கு மன அழுத்தத்தை தந்தது என்கிறார் அகங்க்ஷா சர்மா.
பெறும் சவால்களை மீறி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் உ.பி நீதிமன்றத்தில் “எங்கள் திருமணம் தொடர்பான மூன்று செய்தி தாள்களில் செய்தி தர வேண்டும் என்றும், எங்களின் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதனால் நாங்கள் டெல்லிக்கு சென்றோம். அங்கே திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். இதே சமயத்தில் முகமது தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதை அறிந்த முகமதின் அலுவலக மேலாளர் அவரை வேலையில் விட்டும் அனுப்பியதாக கூறுகிறார் அகங்க்ஷா சர்மா. 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாங்கள் எங்களுடைய மத வழிபாட்டினை எங்களுக்கு இடையே கொண்டு வருவதே இல்லை. நாங்கள் ரம்ஜான், ஹோலி, தீபாவளி என அனைத்தையும் கொண்டாடுகின்றோம் என்று கூறியுள்ளார் அகங்க்ஷா சர்மா.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
செஹர் - அமிதாப் காதல் கதை
செஹர் மற்றும் அமிதாபும் ஒரு அலுவலகத்தில் தான் வேலை பார்த்தார்கள். அவர்களிடையே காதல் மலர, அமிதாப் தான் வேலை பார்த்த இடத்தில் இருந்து வெளியேறினார். எங்கள் பெற்றோர்களிடம் எங்களின் காதலை பற்றி கூறிய போது நிலைமை மிகவும் மோசமானதாக மாறியது. அமிதாப் தான் தங்கிய இருந்த தன் அக்காவின் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை உருவானது. அதே நேரத்தில் என்னுடைய அம்மா எனக்கு வரன் தேட துவங்கினார். இந்த காதலை புரிந்து கொள்ளவும் எங்களை ஏற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டது என்று கூறினார் செஹர். எங்களுடைய திருமணங்களை பதிவு செய்த போது எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் என்னுடைய பெயருக்கு பின்னால் அவருடைய பெயரை இணைக்கக் கூடாது என்பதிலும் எங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடவுள் வழிபாடுகளை தொடரலாம் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
ஃபர்ஹான் - அக்ரித்தி
சில இந்து முஸ்லீம் திருமணங்கள் பெரிய அளவில் பிரச்சனைகள் எதையும் சந்திக்காமல் நடைபெற்றுக் கொண்டும் தான் இருக்கிறது. அக்ரித்தி சச்தேவ் மற்றும் ஃபர்ஹானின் திருமணமும் அப்படித்தான் நடந்தது. லவ் ஹேஸ் நோ ரெலிஜியன் என்ற தீமில் கொடைக்கானலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அக்ரித்தி ஃபர்ஹானை முதன் முதலில் சென்னையில் தான் சந்தித்தார். 2011ம் ஆண்டில் இருவரும் தங்களுடைய நண்பர் ஒருவரின் பார்ட்டிக்கு போதும் சந்தித்துள்ளனர். ஃபர்ஹான் அப்போது தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தார். நானும் என்னுடைய கல்லூரி படிப்பினை முடித்துக் கொண்டு இந்தியா வந்தேன். எங்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் கழித்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
ஆரம்பத்தில் வேறொரு மதத்தில் இருந்து ஒருவரை திருமணம் செய்து கொள்வது குறித்து கொஞ்சம் குழப்பத்தில் தான் இருந்தார்கள் என் பெற்றோர்கள். ஆனால் ஃபர்ஹானை அவர்களை சந்தித்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. அவருடைய குடும்பத்தில் ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு தான். அவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அவர்களுடைய மகனின் சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்தார்கள் என்கிறார் அக்ரித்தி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.