உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் என்று கூறப்படும் இரவு உணவு விருந்து நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை நண்பர்கள் குழு சார்பாக சகர் விருந்து நடைபெற்றது.
மாலை 6:00 மணி முதல் சிக்கன், மட்டன் பிரியாணி தயார் செய்ய ஆரம்பித்த குழுவினர், இரவு 12 மணிக்கு மேல் பரிமாற ஆரம்பித்தனர். சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆவிபறக்க விடிய விடிய பரிமாறினர்.
இந்நிகழ்வில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஏராளமான இந்துக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் ஒற்றுமை நண்பர்கள் தரப்பில் இருந்து 25-வது ஆண்டாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி - பி.ரஹ்மான்