Advertisment

இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, கீழ் முதுகு வலிக்கு இந்த எக்சர்சைஸ் பண்ணுங்க- மருத்துவர் வீடியோ

இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, கீழ் முதுகு வலி மற்றும் உடலுறவின் போது வலி ஆகியன பலவீனமான இடுப்பு தசைகளின் சில அறிகுறிகள்.

author-image
WebDesk
New Update
Hip pain

Kegel exercises to strengthen pelvic floor muscles

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உடற்பயிற்சிகள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், பிரத்தியேக உடல் பாகங்களில் கவனம் செலுத்துகின்றன அல்லது சில வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

Advertisment

உங்கள் இடுப்புத் தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை, மருத்துவர் நிதி ஷர்மா இங்கே பகிர்ந்துள்ளார்.

இந்த தசைகள் சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், யோனி, கருப்பை, பெருங்குடல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. மேலும் சிறுநீர் கழித்தல் உட்பட பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

பலவீனமான இடுப்புத் தசை அறிகுறிகள் என்ன?

இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, கீழ் முதுகு வலி மற்றும் உடலுறவின் போது வலி ஆகியன பலவீனமான இடுப்பு தசைகளின் சில அறிகுறிகள்.

கர்ப்பம், பிரசவம், உடல் பருமன் அல்லது வயதாவதால் உங்கள் இடுப்பு தசைகள் பலவீனமடையலாம். பலவீனமான இடுப்பு, உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது, மேலும் தீவிர பலவீனம், தீவிர மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் மருத்துவர் நிதி ஷர்மா.

இவை மிக முக்கியமான தசைகளில் ஒன்றாகும், எனவே அவற்றை வலுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறும் நிதி, உங்களுக்கு உதவக்கூடிய சில Kegel பயிற்சிகளை வீடியோவில் செய்து காட்டினார்.

எனவே வீடியோவில் மருத்துவர் நிதி ஷர்மா செய்து காட்டிய, Hip Adductors, Pelvic tilt, Bridges, Leg raises, Reverse Plank, Bird Dog ஆகிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள். ஒரு செட்டுக்கு 3-4 என 15-20 முறை திரும்ப செய்யவும்.

உங்களுக்கு இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், இந்த வீடியோவை டவுன்லோட் செய்து இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதை உறுதி செய்யவும்.

மேலும், இதே போன்ற பிரச்சனைகள் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment