துரித உணவகங்களில் பெரும்பாலும் ஃப்ரைட் ரைஸ் வாங்குபவர்கள் அஜினோமோட்டோ சேர்க்க வேண்டாம் எனக் கூறுவார்கள். அதற்கான காரணத்தை கேட்டால், அது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என பதிலளிப்பார்கள்.
இப்படி நெடுங்காலமாக அஜினோமோட்டோ உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும், நமது ஊரின் கால சூழலுக்கு அஜினோமோட்டோ பயன்படுத்தக் கூடாது என்றும் இணையத்தில் ஏராளமான அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இதில் எந்த அளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. மேலும், அஜினோமோட்டோ எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்றும் பலருக்கு கேள்வி இருக்கலாம். அதற்கான விடையை தற்போது பார்ப்போம்.
அஜினோமோட்டோ என்பது ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் பெயர். அஜினோமோட்டோ கபுஷி கைஷா என்பதே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் ஆகும். அந்த நிறுவனத்தினர் ஒரு சீசனிங் பௌடரை தயாரிக்கின்றனர். அதன் பெயர் மோனோ சோடியம் க்ளூடமேட். இதனை எம்.எஸ்.ஜி எனக் கூறுவார்கள்.
அஜினோமோட்டோ கபுஷி கைஷா நிறுவனமானது சீனா முழுவதும் தங்கள் கிளைகளை வைத்துள்ளனர். 1850-களில் மோனோ சோடியம் க்ளூடமேட் என்பதை கரும்புச் சக்கைகளில் இருந்து தயாரித்தனர். இயற்கையிலேயே தாய்ப்பாலில் இந்த எம்.எஸ்.ஜி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்.எஸ்.ஜி மூலமாக தான் உணவின் ருசியை நாம் உணர்கிறோம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த நிறுவனத்தின் பெயரைக் கூறி இதை கெடுதல் எனக் கூறுவது தவறான தகவல் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.