Advertisment

Pongal 2022: பொங்கல் பண்டிகைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?

பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், ஒரு பழமையான பண்டிகை, சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சங்க காலத்தில் பொங்கல் தை நீராடலாக கொண்டாடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2022

History of thai pongal and timing in tamil

பொங்கல் என்பது சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு தமிழர் பண்டிகை. இது அடிப்படையில் ஒரு அறுவடைத் திருவிழா மற்றும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் ஒரே திருவிழா.

Advertisment

பொதுவாக ஜனவரி 14 அன்று வரும், தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீடுகளுக்கு சுத்தம் செய்து, புது வர்ணம் பூசி, அரிசி கோலங்களால் வீடுகளை அலங்கரிப்பார்கள்.

பொங்கல்’ ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. சூரியனின் தெற்கு இயக்கத்திற்கு மாறாக இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மேலும் இது சூரியன் மகர ராசியில் (மகர்) நுழைவதையும் குறிக்கிறது, தமிழ் பேசாத மக்கள், இதை “மகர சங்கராந்தி” என்று பெயரில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பண்டிகை வரலாறு

பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், ஒரு பழமையான பண்டிகை, சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சங்க காலத்தில் பொங்கல் தை நீராடலாக கொண்டாடப்பட்டது. இந்த காலகட்டத்தில், திருமணமாகாத பெண்கள்’ நாட்டின் விவசாய செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாகவும், அதற்காக அவர்கள் தவம் கடைப்பிடித்ததாகவும் நம்பப்படுகிறது.

புராணத்தின் படி, சிவபெருமான் ஒருமுறை தனது காளையான பசவாவை பூமியில் இறங்கி மக்களை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடச் சொன்னார், தினமும் எண்ணெய் மசாஜ் செய்து குளிக்கச் சொன்னார்.

ஆனால் பசவா தவறுதலாக, அனைவரும் மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து, தினமும் சாப்பிட வேண்டும் என்று அறிவித்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான்’ பசவத்தை பூமியில் என்றென்றும் வாழும்படி சபித்தார். பூமியில், பசவா மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று பணிக்கப்பட்டது., இதுவே இன்று வரை கால்நடைகள் விவசாயத்துக்கு  பயன்படுவதற்கு காரணம் என புராணம் கூறுகிறது.

மற்றொரு புராணக்கதை கிருஷ்ணரையும், இந்திரனையும் பற்றியது. அனைத்து தெய்வங்களுக்கும் ராஜாவாக ஆன பிறகு கர்வம் கொண்ட இந்திரனுக்கு பாடம் கற்பிக்க கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் முடிவு செய்தார். பசு மேய்ப்பவர்கள் அனைவரையும் இந்திரனை வழிபடுவதை நிறுத்துமாறு கிருஷ்ண பகவான் கட்டளையிட்டார். இதனால் கோபமடைந்த இந்திரன், இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த தனது பேரழிவு மேகங்களை அனுப்பினார்.

இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்தன் மலையைத் தூக்கி, அனைத்து உயிரினங்களுக்கும் தங்குமிடம் அளித்து, இந்திரனுக்கு தனது தெய்வீகத்தன்மையைக் காட்டினார். இதனால் இந்திரனின் பொய்யான அகங்காரம் உடைந்து, பிறகு அவர் கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்து தொன்மவியல் படி, இந்த பண்டிகை ஆறு மாத நீண்ட இரவுக்குப் பிறகு, கடவுள் தொடங்கும் நாளாக மிகவும் மங்களகரமான நிகழ்வைக் குறிக்கிறது.

                  போகி பொங்கல்      13/01/2022
                  சூரிய பொங்கல்      14/01/2011
                  மாட்டு பொங்கல்      15/01/2022
                  காணும் பொங்கல்      16/01/2022
பொங்கல் தேதி

பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான மார்கழியின் கடைசி நாள், போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது.  இது மக்கள் தங்கள் பழைய உடைமைகளை அகற்றி புதிய விஷயங்களைக் கொண்டாடும் நாள். இந்நாளில் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்படுகின்றன.

முதல் நாள் சூரிய பொங்கல். இது நல்ல அறுவடை வழங்கியதற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்நாளில் புதிதாக அறுவடை செய்த அரிசியுடன், வெல்லம், காய்ச்சிய பாலைக் கொண்டு, சமைத்த பொங்கலை மக்கள்’ சூரிய பகவானுக்கு வழங்கி நன்றி தெரிவிப்பார்கள். விவசாயிகள் தங்கள் கலப்பை மற்றும் அரிவாள்களில் சந்தனம் தடவி சூரியனையும், பூமியையும் வணங்குவார்கள்.

இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல். அன்று தங்களுக்கு பால், உரங்களை வழங்குவதுடன்,  விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, அவற்றின் கொம்புகளுக்கு பளபளப்பான வண்ணங்கள் பூசி, மலர்களால் மாலை அணிவிக்கப்படுகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொங்கல் பின்னர் கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

இறுதியாக காணும் பொங்கல் அன்று, மக்கள் தங்கள் சொந்தங்களுடன் ஒன்றுகூடி ஒன்றாக உணவருந்தி கொண்டாடுகிறார்கள்.

இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் சேர்க்க, தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment