இன்றைய வேகமான உலகில் பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்யும் கட்டாயம் நம் மன அமைதியை குறைக்கிறது.இதனால் தேவையில்லாத விஷயங்களுக்காகக்கூட நாம் மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகிறோம். ஹோலிஸ்டிக் ஹெல்த் கோச் அகான்ஷா பாண்டே, மசூம் மினாவாலாவின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான 30 sec டிப்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். வேலை அதிகமாக இருக்கும்போது (அ) மன அழுத்தம் அதிகரிக்கும்போது, 3 முக்கியமான இடங்களில் மசாஜ் செய்வதன் மூலம் உடனடியாக மன அமைதியைப் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார். "இது ஃப்ரீ, ஸ்பீடு மற்றும் சக்தி வாய்ந்தது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காதில் மசாஜ் செய்வதன் மூலம் மன அமைதி பெறுவது எப்படி?
அகான்ஷா பாண்டே, மசாஜ் செய்யும் முறைகளை விளக்குகிறார். "நீங்கள் இருக்கும் இடத்திலேயே, உங்கள் காதுகளில் 3 புள்ளிகளை மசாஜ் செய்யலாம். ஒருவேளை உங்களிடம் நல்லெண்ணெய் அல்லது நெய் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை. முதலில், உங்கள் முதல் 2 விரல்களைக் காதின் கீழ்ப்பகுதியில் வைத்து, வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். அடுத்து, காதின் மேல் பகுதிக்கு வந்து அங்கேயும் மசாஜ் செய்யுங்கள். இறுதியாக, உங்கள் காதைப் பிடித்து மேல் இருந்து கீழ் வரை மெதுவாக வெளிப்புறமாக இழுங்கள். இதைச் செய்யும்போதே, உங்களுக்கு உடனடியாக ஒருவித ரிலாக்ஸ் உணர்வு ஏற்படும். இதை 4-5 முறை செய்தால், உடனடியாக மன அழுத்தம் குறையும்" என்று அவர் கூறுகிறார்.
நிபுணர்களின் கருத்து என்ன?
தோல் மற்றும் அழகுக்கலை நிபுணரும், Orijine நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் கிருத்து பண்டாரி, காது மசாஜ் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மறைமுக பங்கு வகிக்கிறது என்று கூறுகிறார். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் மனஅழுத்தத்தை குறைக்கிறது. நல்ல தூக்கமும், மன அமைதியும் இளமையாக இருக்க உதவும். காது மசாஜ் மன அமைதியை ஊக்குவிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நிரந்தரமான மன அழுத்தம், உடலை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கும். இதனால் உடலுக்குத் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம், நாம் தெளிவாகவும், கவனத்துடனும் வேலை செய்ய முடியும். இது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று டாக்டர் பண்டாரி குறிப்பிட்டார்.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வேறு வழிகள்
சோமாடிக் குணப்படுத்துனர் நவேதிதா சிங் என்பவர், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த சில வழிகளைப் பரிந்துரைத்துள்ளார். மெதுவாக மூச்சு விடுவது, 'வேகஸ் நரம்பைத்' தூண்டி, உடலை அமைதிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வரும். முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிப்பது அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது 'வேகஸ் நரம்பைத்' தூண்டி, நரம்பு மண்டலத்தைச் சீராக்கும். செருப்பு அணியாமல் தரையில் நடப்பது, கரடு முரடான பொருட்களைக் கையில் பிடிப்பது போன்ற உணர்வுபூர்வமான செயல்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். முணுமுணுப்பது, பாடுவது, அல்லது கொப்பளிப்பது போன்ற செயல்கள் 'வேகஸ் நரம்பைத்' தூண்டி அமைதியான நிலையை உருவாக்கும். சீரான தூக்க சுழற்சி மற்றும் சரியான உணவு முறை ஆகியவை மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.
மன அமைதிக்கு சீரான தூக்கம் மற்றும் சரியான இரத்த சர்க்கரை அளவு முக்கியம் என்று இரு நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். தினமும் 7-9 மணி நேரம் தூங்குவது, சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.