வீட்டை என்னதான் சுத்தம் செஞ்சாலும் அழுக்கு ஆகிறது என்ற கவலை எல்லாருக்குமே இருக்கும். வாரத்துக்கு மூணு முறை ஒட்டடை அடிக்கிற மாதிரி இருக்கு சுத்தம் செய்யவே முடியல அப்படின்னு புலம்பற எல்லாருமே இந்த ஒரு டிப்ஸ ஃபாலோ பண்ணி பாருங்க நளினி மணி குக்கிங் யூடியூப் சேனல் பக்கத்துல இது பற்றி கூறியிருக்கிறதை பார்ப்போம்.
Advertisment
வீட்டி பராமரிப்பில் பின்பற்றக் கூடிய சில எளிமையான டிப்ஸ்கள் குறித்து அடிக்கடி இணையத்தில் தேடி இருப்போம். அந்த வகையில் நம் வேலையை சுலபமாக்கும் சில சிம்பிளான டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
டிப்ஸ் 1: ஒரு பவுல் எடுத்துட்டு அதுல தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தலைக்கு போடக்கூடிய ஏர் கண்டிஷனர் உடைத்த கற்பூரம் சேர்த்து கலந்து அது ஒரு துணியில நனைச்சு செவுத்து ஓரம் கப்போர்டுல இந்த மாதிரி அழுக்கு, ஒட்டடை இருக்கிற பக்கம் எல்லாம் இதை வச்சு தொடச்சோம் அப்படின்னா திரும்ப ஒட்டட வாரத்துக்கு ரொம்ப நாள் ஆகும்.
டிப்ஸ் 2: வீட்டில் குழந்தைகள் இருந்தால், சுவர்களில் கலர் பென்சில்கள் கொண்டு எழுதி வைத்திருப்பார்கள். இதனை சுத்தப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும். ஆனால், இதனை சுலபமாக நம்மால் மாற்ற முடியும். அதன்படி, பாத்திரம் தேய்க்க பயன்படும் ஸ்க்ரப்பரை அடுத்து, அதில் சிறிதளவு பேக்கிங் சோடா தடவிக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு சுவர்களை துடைத்தால், அதில் இருக்கும் கலர் பென்சில் கறைகள் அனைத்தும் எளிதாக நீங்கி விடும்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 3: வீட்டில் குப்பைகளை அள்ளுவதற்கு பயன்படும் முறம் பெரும்பாலும் அசுத்தமாக இருக்கும். குறிப்பாக, அதில் ஈரப்பதம் இருந்தால் மண் உள்ளிட்டவை ஒட்டிக் கொள்ளும். எனவே, முறத்தை அப்படியே பயன்படுத்தாமல் அதன் மீது பாலித்தீன் கவரை சுற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் முறம் சுத்தமாக இருக்கும். க்ளீனிங் வேலையும் எளிதாக முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.