உப்பு, மஞ்சள் சேர்த்து வீடு துடைத்து பாருங்க… எறும்பு, பூச்சி தொல்லை இருக்காது!
ஆனால், சில சமயங்களில், கவனக்குறைவாக காபி, டீ, பால் அல்லது வேறு சில உணவுப் பொருட்கள் தரையில் சிந்தக்கூடும். இதனால், தரை மட்டுமல்லாமல், வீட்டின் சூழலும் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆனால், சில சமயங்களில், கவனக்குறைவாக காபி, டீ, பால் அல்லது வேறு சில உணவுப் பொருட்கள் தரையில் சிந்தக்கூடும். இதனால், தரை மட்டுமல்லாமல், வீட்டின் சூழலும் பாதிப்புக்குள்ளாகிறது.
நம் வீடுகளில் தினமும் பயன்படுத்தும் காபி, டீ, பால் போன்ற உணவுப் பொருட்கள் தரையில் சிந்திவிட்டால், கறைகள் படிந்து பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல், இந்தக் கறைகளில் இருந்து வரும் இனிப்பு வாசனையானது எறும்புகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் ஈக்களை ஈர்த்து, நம் வீட்டை சுகாதாரமற்றதாக மாற்றிவிடும். எவ்வளவுதான் துடைத்தாலும், அந்த இனிப்பு வாசனை முழுவதுமாக நீங்காமல், பூச்சிகளின் படையெடுப்பு தொடர்வதுண்டு.
Advertisment
இந்த பூச்சிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும், உங்கள் வீட்டை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கவும் ஒரு சூப்பரான வழி இருக்கிறது. இதற்கான பொருட்களை நாம் கடைகளில் தேடி அலையத் தேவையில்லை. நம் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களே போதும்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
வெதுவெதுப்பான தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் (இரண்டு சிட்டிகை அளவு) டெட்டால் (விருப்பத்திற்கேற்ப) அல்லது ஷாம்பு / கம்ஃபர்ட்
சுத்தம் செய்யும் முறை
ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பு மற்றும் இரண்டு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். உங்களிடம் டெட்டால் இருந்தால், அதையும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். டெட்டால் இல்லையென்றால், அதற்குப் பதிலாக ஷாம்பு அல்லது கம்ஃபர்ட் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது, மாப் (mopping cloth) எடுத்து நன்றாகப் பிழிந்த பிறகு, தரை கறையாக இருக்கும் இடத்தில் லேசாக அழுத்தித் துடைத்தாலே போதும். சூப்பராக அந்தக் கரைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இந்த முறையின் நன்மைகள்
உப்பு மற்றும் மஞ்சள் தூளின் வாசனைக்கு எறும்புகள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள் போன்ற எந்தப் பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
வீட்டில் திரவ கிளீனர்கள் இல்லாத சமயத்தில் கூட இந்த முறையைப் பயன்படுத்தி எளிதாக வீட்டை சுத்தம் செய்யலாம்.
உப்பும் மஞ்சள் தூளும் நம் வீட்டிற்கு ஒரு நேர்மறையான அதிர்வை (positive vibration) கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
கண்டிப்பாக இதை உங்கள் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்! இது மிகவும் சுலபமான மற்றும் பயனுள்ள ஒரு முறையாகும்.