scorecardresearch

கலர், சைஸ், ஸ்டைல்… வீட்டுக்கு ஃபர்னிச்சர் இப்படி தேர்வு பண்ணுங்க!

உங்கள் வீட்டிற்கு சரியான பர்னிச்சர்களை எவ்வாறு தேர்வு செய்வது? பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவிட் லைஃப்ஸ்டைல் ​​இயக்குனர் நீலம் தெவானி கூறினார்.

home decor
பர்னிச்சர்களின் பாணி, அளவு மற்றும் வண்ணம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது முக்கியம். (Source: Getty/ Indian express)

ஒரு வீட்டின் ஒட்டுமொத்த அழகியல் மற்றும் செயல்பாட்டின் உன்னதம் ஆகிய அனைத்தும், வீட்டில் வைக்கப்படும் பொருட்களில் மூலம் தெரியப்படும். வீட்டை அலங்கரிப்பதற்கு ஏற்ற பர்னிச்சர்களை தேர்ந்தெடுப்பது மிக அவசியம் என்று நம்பப்படுகிறது.

ஒரு வீட்டின் அலங்காரம், அந்த வீட்டில் வசிப்பவர்களின் மனநிலையை மேம்படுத்தவும் அவர்களை வீட்டிற்கு நுழையும்போது இனிமையாக வரவேற்கும் வண்ணம் வழிவகுக்க வேண்டும்.

இதைத் தவிர்த்து, தேவையற்ற பொருட்களை கொண்டு வீட்டை நிரப்பி வைப்பது, இதற்கு எதிர்மறையான மனநிலையை கொடுக்கும். எனவே, பர்னிச்சர்களின் பாணி, அளவு மற்றும் வண்ணம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது முக்கியம்.

இணை நிறுவனரான சஜல் லம்பா கூறியதாவது, “நீங்கள் தேர்ந்தெடுக்கும் பர்னிச்சர்கள் உங்களை பிரதிபலிக்கு வண்ணம் இருப்பது சிறந்தது. வீட்டின் பல்வேறு பகுதிகளுக்கு என்னென்ன பர்னிச்சர்கள் தேவை என்று மிக தெளிவாக கணக்கிட்டு வாங்கலாம்”, என்றார்.

எனவே, உங்கள் வீட்டிற்கு சரியான பர்னிச்சர்களை எவ்வாறு தேர்வு செய்வது? பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவிட் லைஃப்ஸ்டைல் ​​இயக்குனர் நீலம் தெவானி கூறினார்.

“உங்கள் வீட்டின் அளவு, பட்ஜெட், செயல்பாடு, அழகியல், தரம் மற்றும் உங்களுக்கு விருப்பமான வடிவமைப்பு பாணி மற்றும் தீம் ஆகியவை இதில் அடங்கும்”, என்றார்.

மேலும், அவர் பின்வரும் உதவிக்குறிப்புகளை பரிந்துரைத்தார்:

  • தீம் அல்லது அலங்கார பாணியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் அடிப்படையில் வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் பட்டியலை உருவாக்கவும்.
  • உங்கள் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு எது முக்கியமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
  • மடிப்பு மேசைகள், நாற்காலிகள் அல்லது புல்-அவுட் சோஃபாக்கள் போன்ற பல செயல்பாட்டுத் பர்னிச்சர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

கூடுதலாக, வீட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு என்ன பர்னிச்சர்கள் தேவை என்று கவனம் செலுத்தவேண்டும் என்று கூறுகிறார். “உதாரணத்திற்கு, அடிப்படைகளில் படுக்கையறைகள், படுக்கைகள், ஹால் இருக்கைகள் போன்றவை அடங்கும். அடுத்து, ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் மற்றும் வசதியான குறைந்த பராமரிப்பு கொண்ட துண்டுகளைத் தேர்ந்தெடுக்கவும்,” என்று அவர் விளக்கினார்.

“வேறொருவருக்கு வேலை செய்வது உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், உங்கள் வீட்டிற்கு பொருத்தமான பர்னிச்சர்களை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் அடையாளத்தை அறிந்துகொள்வது சிறந்தது.

செயல்பாடு, ஆயுள், தேவை மற்றும் அழகியல் ஆகியவற்றை மனதில் வைத்து, உங்கள் வாழ்க்கை முறையை நிறைவுசெய்யும் சிறந்த தோற்றமளிக்கும் உட்புறங்களை நீங்கள் உருவாக்கலாம்,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Home decor tips to select the right furniture