வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இந்த ஹோம்மேட் ஹேர்பேக்; முடியின் வளர்ச்சியை ஈசியா அதிகரிக்கும்: டாக்டர் அட்வைஸ்
தலைமுடியின் வளர்ச்சியை ஈசியாக அதிகரிக்கச் செய்யும் ஹோம்மேட் ஹேர்பேக் எப்படி தயாரிப்பது என மருத்துவர் அஸ்விதா தெரிவித்துள்ளார். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், பலருக்கும் இருக்கக் கூடிய பொதுவான பிரச்சனையாக தற்போது முடி உதிர்வு இருக்கிறது. கால சூழலுக்கு ஏற்ப நாம் ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் ஆகியவற்றால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது.
Advertisment
முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக ஏராளமான ஷம்புக்கள், ஹேர் சீரம் ஆகியவை இப்போது சந்தையில் விற்பனையாகிறது. இவை குறைவான விலையில் இருந்து கிடைக்கின்றன. எனினும், இந்தப் பொருட்களில் நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக இயற்கையான ஹோம்மேட் ஹேர்பேக்கை பயன்படுத்தலாம்.
அந்த வகையில் நமக்கு தேவையான ஹேர்பேக்கை இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என மருத்துவர் அஸ்விதா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஹேர்பேக் தீர்வாக அமைகிறது. இதனை தயாரிப்பதற்கான முறை குறித்து பார்க்கலாம்.
இதற்காக, ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் எடுத்து சாதம் வடித்த தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இத்துடன் நம் தலை முடிக்கு தேவையான அளவிற்கு கற்றாழை ஜெல், செம்பருத்தி இலைகள், செம்பருத்திப் பூ, தயிர், வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த ஹேர்பேக்கை நம் தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும் என மருத்துவர் அஸ்விதா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களிலும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
நன்றி - Sarans Hospitals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.