தொடர்ச்சியாக மாறி வரும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. முடி என்பது அழகியல் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல. அது உடலின் ஆரோக்கியம் சார்ந்ததும் கூட. எனவே, முடியை சீராக பராமரிப்பது முக்கியம்.
இதற்காக இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூக்கள், ஹேர் சீரம், மற்றும் ஹேர் ஆயில் போன்றவற்றை பயன்படுத்துவது, சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஹேர்பேக்கை பயன்படுத்தினால், அதில் இருக்கும் குளிர்ச்சி தன்மையும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.
அந்த வகையில், அதிகம் குளிர்ச்சி இல்லாத ஆரோக்கியமான ஹேர்பேக் செய்வது எப்படி என இதில் பார்க்கலாம். இதற்காக ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் 4 அல்லது 5 செம்பருத்தி இலைகளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும். நம் தலை முடி உறுதியாக வளரும். மேலும், முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.