வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் சூழல் நிலவ வேண்டும் என்ற நம்பிக்கையில் சாம்பிராணி பயன்படுத்துவார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அஷ்டமி, நவமி ஆகியவற்றின் போது சாம்பிராணி போடலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், முடிந்தால் தினசரி சாம்பிராணி போடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பூஜை பொருள்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சாம்பிராணி. அதனடிப்படையில், நமது வீட்டிலேயே சாம்பிராணி எவ்வாறு செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.
சாம்பிராணி செய்வதற்கு தேவையான பொருள்களை முதலில் காணலாம். மருதாணி விதைகள் 250 கிராம், வெண் கடுகு 250 கிராம், நாய் கடுகு 250 கிராம், சாம்பிராணி கட்டி 250 கிராம், கற்பூரம் 25 கிராம், குங்கிலியம் 100 கிராம், அருகம்புல் பொடி 50 கிராம், வில்வம் பொடி 50 கிராம், வேப்பிலை பொடி 50 கிராம், பச்சை கற்பூரம் 25 கிராம், ஜவ்வாது 1.
இவை அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், தேங்காய் சிரட்டையை அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும். இந்த சிரட்டை நன்றாக கருகிய பின்னர், அதில் நாம் தயாரித்து வைத்த சாம்பிராணி பொடியை தேவையான அளவு சேர்த்து வீடு முழுவதும் காண்பிக்கலாம்.
இதனால் நம் வீட்டில் நேர்மறையான ஆற்றல் உருவாகிறது என பலர் நம்புகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“