நீண்ட நாட்கள் வெண்டைக்காய் கெடாமல் இருப்பதற்கு நன்றாக கழுவி விட்டு ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெண்டைக்காய் மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் நறுக்கி காற்று புகாத பாத்திரத்தில் மூடி பிரிட்ஜில் வைத்துவிடலாம்.இதனால் வெண்டைக்காய் கெடாமலும் காய்ந்து போகாமலும் இருக்கும்.
ஒரு சாக்ஸ் எடுத்து அதற்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தண்ணீர் ஒழுகும் பிரச்சனை இருக்காது, அப்படியே ஒழுகினாலும் அந்த சாக்ஸ் நீரை உறிஞ்சி விடும். தினமும் வாட்டர் பாட்டில் எடுத்துக்கொண்டு செல்லும்போது தண்ணீர் சிந்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்ப்பு.
குக்கரில் விசில் வருவதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் குக்கரில் மேல் உள்ள வெயிட்டை தனித்தனியாக கழற்றி மாதம் ஒரு முறை கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல அதனுள் உள்ள உணவு துகள்களையும் ஊசியை வைத்து குத்தினால் வெளியேறிவிடும். அதுபோல செய்வதன் மூலம் குக்கரில் விசில் வருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
குக்கர் கைப்பிடி அடிக்கடி லூஸ் ஆகிவிடும் பிரச்சனை அனைவருக்கும் இருக்கும் அதற்கு மாத்திரை அடைத்து வரும் குப்பியை எடுத்து அதில் அந்த கைப்பிடி நட்டை சேர்த்து குக்கரில் போட்டு விட்டால் கைப்பிடி அடிக்கடி லூசாகாது.
பிஸ்கட் நமுத்து விட்டதா அப்படி என்றால் தோசை கல்லில் அதை ஒரு இரண்டு நிமிடம் போட்டு எடுத்தால் மொறு மொறு என்று ஆகிவிடும். மாவு தேய்த்த பிறகு மீதியான கோதுமை மாவை தூக்கி போடாமல் ஒரு பெருங்காயத்தூள் டப்பாவை நன்கு கழுவிட்டு அதில் வைத்துக் கொண்டால் எப்போதெல்லாம் தேவை படுகிறதோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்ஜிக்கு பின்புறம் உள்ள தூசை சுத்தம் செய்வதற்காக ஒரு கரண்டியில் சாக்ஸைமாட்டி ரப்பர் பேண்ட் போட்டு அது கழன்று வராதவாறு மாட்டிவிட்டு சுத்தம் செய்யலாம். வீட்டில் உள்ள மேக்கப் பொருட்கள் அங்கங்கே சிதறிகிறதா, அதற்கு நகை கடையில் வாங்கி வரும் பர்சுகளை ஒரு டப்பாவில் அடுக்கிய அதற்குள் பொருட்கள் போட்டு வைத்தால் பொருட்கள் அழகாக அடுக்கிய நிலையில் இருக்கும்.
கடைக்கு காய்கறி வாங்க பைகள் எடுத்து செல்லும்போது தனியாக பர்சை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றால் பையின் உள்பகுதியில் பர்சை வைத்து ஒரு ஊசியால் குத்தி விட்டால் பர்ஸ் மிஸ் ஆகாது. மேலும் அதனை தனியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவசியமும் இருக்காது.