வீட்டுல பழைய பனியன், துணி இருக்கா? டிசைன் டிசைனா குட்டி தலையணை; இப்படி செஞ்சு பாருங்க!
நமது வீட்டில் பயன்படாமல் இருக்கும் பழைய பனியன், டீசர்ட் போன்ற துணிகளை பயன்படுத்தி எவ்வாறு குட்டி தலையணை செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் தலையணை வாங்கும் செலவு மிச்சமாகும்.
நமது வீட்டில் பயன்படாமல் இருக்கும் பழைய பனியன், டீசர்ட் போன்ற துணிகளை பயன்படுத்தி எவ்வாறு குட்டி தலையணை செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் தலையணை வாங்கும் செலவு மிச்சமாகும்.
வீட்டில் எத்தனையோ தலையணைகள் இருந்தாலும் அவை பற்றாக்குறையாக இருப்பது போல தான் சிலருக்கு தெரியும். படுக்கைக்கு பயன்படுத்துவதில் இருந்து, சோஃபாவில் வைப்பது வரை பல்வேறு விதமான, பல வடிவங்களில் தலையணைகள் விற்பனை ஆகின்றன.
Advertisment
இதற்காக நிறைய செலவு செய்து தலையணைகளை வாங்குவோம். ஆனால், ஒரு சிறிய மாற்றத்திற்காக நாமே தலையணைகளை செய்து பார்த்தால் என்ன? என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படி உங்களுக்கு தோன்றினால், இந்தப் பதிவு உங்களுக்கானது தான்.
அதன்படி, வீட்டில் இருக்கும் பழைய பனியனை இரண்டு மடிப்பாக எடுத்து, அதனை வட்ட வடிவமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து தைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, சுமார் 4 செ.மீ அளவு எடுத்து ஒரு பகுதியை மட்டும் ஃப்ரீயாக விட வேண்டும்.
இனி, நம்முடைய வீட்டில் பயன்படுத்த முடியாத சில துணிகளை சிறிய துண்டுகளாக வெட்டி, அவை அனைத்தையும் தைத்து வைத்திருக்கும் பனியனிற்குள் திணிக்க வேண்டும். இப்போது, தைத்து வைத்த பனியன் பார்ப்பதற்கு குட்டி தலையணை போன்று இருக்கும். இனி ஊசி நூல் கொண்டு இந்த இடைவெளியையும் தைத்து விடலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் அழகான குட்டி தலையணை தயாராகி விடும். இவ்வாறு வீட்டிலேயே தலையணை செய்து கொள்வதால் செலவும் மிச்சமாகும், நமக்கும் மனநிறைவாக இருக்கும்.