Advertisment

கருவளையம் நீங்க வீட்டு வைத்தியம்: ஆயுர்வேத நிபுணர் பரிந்துரை

ஆயுர்வேத மருத்துவர் கரு வளையங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில சிறந்த வீட்டு வைத்தியங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Dark circle

Natural remedies for dark circles

மோசமான தூக்கம், பரம்பரை, வயது, மன அல்லது உடல் அழுத்தம், நீண்ட திரை நேரம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஆகியவை கருவளையங்களை ஏற்படுத்தும்.

Advertisment

உண்மையில், கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது, பொதுவாக வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதல் இடம் இதுவாகும். எனவே ஒரு சீரான உணவை உட்கொள்வதோடு கூடுதலாக சில வீட்டு வைத்தியங்களும், அவற்றின் தோற்றத்தைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

சந்தையில் ஏராளமான ஐ கிரீம்கள் உள்ளன, ஆனால் தவறான கிரீம் பயன்படுத்துவது, நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்தா, கரு வளையங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில சிறந்த வீட்டு வைத்தியங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.

பாதாம் எண்ணெய்

almond

இந்த எண்ணெய் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளமான மூலமாகும், மேலும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது.

இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மோதிர விரலால் லேசான மசாஜ் செய்வது சருமத்தின் மேற்பரப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் டார்க் சர்கிள்ஸ், சோர்வு அறிகுறிகள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் தோற்றத்தை குறைக்கிறது. மேலும், பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவலாம்.

உருளைக் கிழங்கு சாறு

ஒரு பச்சை உருளைக்கிழங்கை அரைத்து, சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவவும். உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இதில் என்சைம்கள், வைட்டமின் சி, ஸ்டார்ச் உள்ளது, இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தோலுக்கு ஊட்டமளிக்கிறது, மேலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment