இட்லி மாவில் இந்த பொருள் கொஞ்சம் சேருங்க… கிச்சன் சிங்க் பளபளப்பதை பாருங்க!
உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, கிச்சன் சிங்க்-ஐ புதிதுபோல் பளபளப்பாக்க சபி விளாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, கிச்சன் சிங்க்-ஐ புதிதுபோல் பளபளப்பாக்க சபி விளாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இட்லி மாவில் இந்த பொருள் கொஞ்சம் சேருங்க… கிச்சன் சிங்க் பளபளப்பதை பாருங்க!
உங்கள் வீட்டில் உள்ள கை கழுவும் சிங்க் அல்லது பாத்திரம் கழுவும் சிங்க், நாளடைவில் கறைகள் படிந்து மங்கிப் போகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, சிங்க்கை புதிதுபோல் பளபளப்பாக்க சபி விளாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
தேவையான பொருட்கள்:
2 டேபிள்ஸ்பூன் புளித்த மாவு , சிறிதளவு உப்பு, டூத் பேஸ்ட், மென்மையான ஸ்கிரப்பர் (Scratch pad) அல்லது துணி, கை உறைகள் (Gloves)
சுத்தம் செய்யும் முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் புளித்த மாவு, உப்பு, மற்றும் டூத் பிரஷ் கொண்டு நன்கு கலக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். மாவில் உள்ள ஈரப்பதமே கலவைக்கு போதுமானது. இது ஒரு கெட்டியான பசை போல் இருக்க வேண்டும். முதலில் சிங்க்கில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் தயாரித்த கலவையை, கரை படிந்திருக்கும் சிங்க் முழுவதும் படும்படி தடவுங்கள். குறிப்பாக, கறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் சற்று கூடுதலாகத் தடவலாம்.
ஒரு மென்மையான ஸ்கிரப்பர் அல்லது பழைய டூத் பிரஷ் கொண்டு, கலவையைத் தடவிய பகுதிகளில் மெதுவாகத் தேய்க்கவும். உங்கள் கைகள் பாதுகாப்பாக இருக்க, கை உறைகளைப் பயன்படுத்தலாம் அல்லது கவரை சுற்றிக் கொள்ளலாம். நன்கு தேய்த்த பிறகு, இந்தக் கரைசலை 5 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். இந்த நேரம், மாவில் உள்ள புளிப்புத் தன்மையும், உப்பும் கறைகளை நீக்க உதவும்.
5 நிமிடங்கள் ஊறிய பிறகு, சிங்க்கை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவவும். சிங்க் எப்படிப் பளபளப்பாக மாறியுள்ளது என்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள்! சுவர்கள் அல்லது டைல்ஸ்களில் கரை படிந்திருந்தால், அங்கேயும் இந்த கலவையைத் தடவி லேசாகத் தேய்த்தால் கறைகள் நீங்கும். ஆனால் சிங்க்கிற்கு ஊறும் நேரம் அவசியம்.
சிங்கைச் சுத்தம் செய்யும்போது, தண்ணீர் எதுவும் ஊற்றாமல், நேரடியாக இந்தக் கரைசலைத் தடவி தேய்ப்பது கறைகளை விரைவாக நீக்க உதவும். இந்த முறையை நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வந்தால், சிங்க் எப்போதுமே புதுப் பொலிவுடன் இருக்கும். பழைய பாத்திரங்களில் உள்ள கறைகளுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.